Tuesday, 18 October 2016

குட்டி கதை- அடக்கமும் அடங்காமையும்

யானை ஒன்று குளித்து விட்டு மிகவும் சுத்தமாக வந்துக்கொண்டிருந்தது.
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அதில் வரும் போது எதிரே  சேற்றில் குளித்து விட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொன்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டது. அந்த பன்றி எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம் பார்த்தாயா  அந்த யானை என்னை பார்த்து பயந்து விட்டது என்று சொல்லி சிரித்தது.
அந்த யானையை பார்த்து இன்னொரு யானை, அப்படியா! நீ பயந்து விட்டாயா? என்று கேட்டது.
அதற்கு யானை தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி இருக்கும். மேலும் பன்றியின் சேறு என் மீது விழுந்து நானும்  அசுத்தமாகி இருப்பேன். இந்த காரணங்களால் நான் ஒதுங்கி கொண்டேன் என்றது.
தன் பலம்,பலவீனம் தெறித்தவர்கள்  அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
குறள்:
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"
குறள் விளக்கம்:
அடக்கம்= அழியாத புகளை கொடுக்கும்
அடங்காமை = வாழ்வையே இருளாக்கி விடும்
-- அசாருதீன்

Wednesday, 5 October 2016

சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!

 சிறு நீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடுப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வது இயலாமல் போய்விடும். தீவிரமான சிறுநீரக பிரச்னைகளை குறைக்க ஒருசில அறிகுறிகள் தெரிந்தாலே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரமே கண்டுபிடித்தல் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சை  அளித்துவிடலாம்.




சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்கள்:-
சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எதனை முறை கழிக்கிறோம் என்ற விதத்தில் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அளவு கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதே போல் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை விதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதுவும் முக்கியமாக இரவு நேரத்தில்  தான்  இந்த மாற்றங்களை உணரலாம். அதில் சிறுநீரின் நிறமும் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன தோன்றும் அனால் எதுவுமே வராது.


சிறுநீர் கழிக்கும் பொது கஷ்டப்படுவது அல்லது வலி ஏற்படுவது:-
சில நேரம் சிறுநீர் கழிக்கையில் கஷ்டப்படலாம் அல்லது அழுத்தத்தை உணரலாம் அல்லது வலி ஏற்படலாம். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் சிறு நீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் தன்மை உண்டாகும். இந்த தொற்றுக்கள் சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி பின்பக்கம் வலி உண்டாகும்.


சிறுநீரில் ரத்தம்:- 
இது சிறுநீரக நோயின் அறிகுறியாகும். கண்டிப்பான முறையில் இது சிறுநீரக நோயையே குறித்தாலும் கூட சில நேரத்தில் வேறு காரணமும் கூட இருக்கலாம். அதனால் ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் முறுத்துவரை உடனே அணுகுவது நல்லது.


வீக்கம்:- 


உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. அதனை அவையால் செய்யமுடியவில்லை என்றால் இந்த கூடுதல் நீர்மம் குவிந்து கொண்டே சென்று அதனால் கைகள், கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.


தீவிரமான சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சி:-


 எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனை சீறுநீரகம் சுரக்கிறது. இது ரத்த சிவப்பணுக்களை ஆக்ஸிஜன் கொண்டு செல்ல உதவும். சிறுநீர் னாய் ஏற்பட்டால்  எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து போய்விடும். இதனால் உங்கள் உங்கள் ரத்த சிவப்பணுக்கள் குறைந்து விடும். இதன் மூலம் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அணைத்து அணுக்களுக்கும் ஆக்ஸிஜன் குறைவாக செல்லும். அதனால் தான் பொதுவாக அயர்ச்சியும் சோர்வும் ஏற்படுகிறது.


மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் இயலாமை:-
சிறுநீரக நோயுடன் தொடர்புடைய ரத்த சோகை உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனை வெறுமையாக்கும். இதனால் மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


எப்போதும் குளிர்வது:- 
உங்களுக்கு உந்த நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் கூட சோகை இருப்பதால் எப்போதும் குளிராகவே இருக்கும். சிறுநீரக தொ ற்று இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும்.


சருமத்தில் சொறி மற்றும் அரிப்பு ஏற்படும்:-
உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் உங்கள் ரத்தத்தில் கழிவுகள் குவியும் இதனால் சருமத்தில் தீவிரமான சொறிகளும் அரிப்புகளும் ஏற்படும்.


அமோனியா மூச்சி மற்றும் மெட்டாலிக் சுவை:-
சிறுநீரகம் சரியாக செயல் படவில்லை என்றால் ரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகரித்து விடும். இந்த யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சி காற்றை சிறுநீர் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனை அமோனியா மூச்சி என்பார்கள். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.


குமட்டல் மற்றும் வாந்தி:-
சிறுநீரக நோய் இருந்தால் ரத்தத்தில் உள்ள கழிவு பொருட்கள் குவிந்து கொண்டே போகும் இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.


மூச்சி விடுவதில் சிரமம்:-
சிறுநீரக னாய் இருந்தால் நுரைஈரலில் நீர்மம் சேர்ந்து விடும். மேலும் சிறுநீரக நோயினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவான ரத்த சோகை ஏற்படும். இதனால் உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை இதன் விளைவாக மூச்சி விடுவதில் சிரமமா ஏற்படும்.


முதுகு மற்றும் இரு பக்கங்களிலும் வலி:-


சிறுநீரக இருந்தால் சில நேரங்களில் வலி ஏற்படும். சிறுநீரக குழாயில் கல் இருந்தால் கீழ் முதுகில் ஆரம்பித்து கவட்டை வரை தீவிரமாக வலி ஏற்படும். லிசிஸ்டிக் என்ற சிறுநீரக மரபு நோய் இருந்தாலும் கூட வலி ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் நீர் நிறைந்த பல கட்டிகள் உருவாகும். நீர்ப்பை சுவர்களில் திசு இடைநார் சிறுநீர்ப்பை அலர்ஜி என்ற தீவிரமான அலர்ஜி ஏற்படும் பொது தீவிரமான வழியும் சுகவீனமும் ஏற்படும்.





Tuesday, 4 October 2016

சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறை இடுவது...?

சவூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி)
சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது...? யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம்.

1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்
2.தொழிலாளர் அமைச்சகம்(Ministry of labor)தொலைபேசி எண்மூலம் முறைஇடலாம்
3.இந்திய தூதரகத்தில் (Embassy of India)முறை இடலாம்
4.இந்திய இனை தூதரகத்தில் (Consulate General of India)முறை இடலாம்
5.தொழிலாளர் நீதிமன்றம்(labor court)அனுகவும்
6.தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு இம் முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல
Ministry of labor
வெப்சைட்டிற்க்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறை இடலாம் அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்

ஆன்லைன் புகார் தெறிவிக்க....!!

2.தொழில் அமைச்சகம்(ministry of laber)

தொலைபேசி மூலமும்

Riyadh:01-4039857/kharj:01-4548231
duwadmi:01-6420920
majmaa:06-4321724
wadi addawasir:01-7840264
zulfi:06-4220235
sahqra:01-6221342
Makkah:02-5420745
Jeddah:02-6311687
Taif:01-7461616
Qun fudah:07-7320761
Madinah:04-8654416
Yanbu:04-3222688
Al ula:04-8840380
Onaizah:06-3640285
Qassim(buraidah):06-3250387
Al rass:04-3333502
Hail:06-5321139
Dammam:03-8261419
Ahsa:03-5822801
Hafralbatin:03-7220220
Khobar:03-8641541
Abqaqiq:03-5661324
Jubail:03-3620150
Khafji:03-7660380
Ras tannurah:03-6670424
Aseer(abha):07-2224128
Bisha:07-6226718
Baha:07-7253240
Najran:07-5224995
Jazan:07-3213671
Jauf:04-6421108
qurrayat:04-6421108
Tabuk:04-4221181
Al wahj:04-4421970
Arar:04-6627128
Turaif:04-6521029

3.இந்திய தூதரகத்தில் முறை இடலாம்

தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும் 9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும்
labor-complain form
http//www.scribd.com/mobile/doc/227679439?width=320

4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம்

தொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அணுகவும்
labor complaint-consulte
http//www.scribd.com/mobile/doc/227681763?width=320

5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் laber court
கீழே உள்ள தொலைபேசி எண்னுக்கு தொடர்புகொண்டு தீர்வு காணலாம்

makkah:02-5420745
jeddah:02-6311687
taif:02-7495200
qunfudah:07-7321250
madina:04:8654417
yanbu:04-3222488
alula:04-8840830
abha:07:2242128
bishan:07-6226718
al bahan:07-7253240
najrah:07:5221431
jazan:07-3226446
tabuk:04-4421181
al wahj:04-4421970

அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்க்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது வேலை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேழும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும்

6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு
தொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம். உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவர்
முகவரி:-

office of the domestic workers committee
the director of welfer&guidance
consultant of training&social reserch
near al harama(formerly sofitel)
hotel jeddah
tel:6616688 fax:6653238
cell:0504658803

நண்பர்களுக்கு பகிரவும்

கரையான்புற்றைப்பற்றி – தெரிந்துகொள்வோம்

கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்களா?

காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.
இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன. புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.

புற்றின் காவலாளிகள் உயிரினை பொருட்படுத்தாது பணி ஆற்றும். இவை ஒவ்வொன்றிற்கும் தனி தனி அறைகள் இருக்கும என்பது தான் ஆச்சரியம். புற்றின் மேற்பகுதியில் ஒரு பகுதி வதியாக 24 மணிநேரமும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும் படி தான் இவைகள் புற்றை அமைக்கும். இதனால் புற்றின் உள் பகுதிக்கு குளிர்ந்த காற்று செல்வது சாத்தியமாகிறது. ஏதேனும் பிரட்சனையால் புற்று சேதமடைந்தால் உடனே அதை சரி செய ஒரு பிரிவும் இதில் உண்டு. கரையான்களில் இராணி கரையான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடுமாம்.
முட்டைகள் எப்பொழுதும் சூடாக இருக்க புற்றின் மேற் பகுதியிலிருந்து நேராக அந்த அறைக்கு சூரிய ஒளி வரும் படி அவைகள் புற்றினை அமைக்கும். மேலும் புற்று அவ்வபோது பரிசோதனைக்குட்படுத்த­ப்பட்டு குறைகள் சீர் செய்யப்படுகின்றன.
ஏதேனும் ஆபத்தென்றால் நிமிடத்தில் புற்றின் மேற்பகுதி மூடப்பட்டு மறைக்கப்படும்.
இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு மூளை கிடையாது..

Monday, 3 October 2016

மக்களுக்கு தெறியாத சில முக்கியமான சட்டங்கள்

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Saturday, 1 October 2016

Europe’s Forgotten ‘Hitler’ Killed Over 10 Million Africans — But the West Erased it From History

Most people have no idea of who is pictured above, but you should. The sight of this man should cause a similar revulsion to that of seeing Mussolini, Mao, Stalin or Hitler, as he committed an African genocide that resulted in the killing of over 10 million people in the Congo.
His name is King Leopold II of Belgium.

 Most of people never learned about him in school, and have also most likely never heard about him in the media either. This is because he’s not included in the popular narrative of oppression (which includes things like U.S. slavery and the Holocaust).
King Leopold II is part of an ongoing history of colonialism, imperialism, slavery, and genocide in Africa that would clash with the popular social narratives taught in our school system today. It doesn’t fit neatly into school curriculums where, paradoxically, it is looked down upon to make overtly racist statements. However, it’s quite fine not to talk about a genocide perpetrated by European capitalist monarchs that killed over 10 million Congolese.
Belgium’s King Leopold II ran a personal empire so vast and cruel, it rivaled – and even exceeded – the crimes of even some of the worst dictators of the 20th century.
When Leopold II ascended to the throne in 1865, he ruled with the kind of gentle hand that Belgians wanted from their king after the democratization of the country in the wake of the multiple revolutions and reforms. He had great ambitions of building an overseas empire, and was convinced, like most statesmen of his time, that a nation’s greatness was directly proportional to the resources it could extract from those colonies.
He disguised his business transactions as “philanthropic” and “scientific” efforts under the banner of the International African Society and used slave labor to extract Congolese resources and services. His reign was enforced through work camps, body mutilations, torture, executions, and his own private army.

The empire was known as the Congo Free State, and Leopold II stood as its undisputed slave master. For almost 30 years, rather than being a regular colony of a European government, Congo was administered as the property of Leopold II for his personal enrichment.
The world’s largest plantation, registering at 76 times the size of Belgium, possessed rich mineral and agricultural resources and lost nearly half of its population by the time the first census counted only 10 million people living there in 1924.
Interestingly, when we learn about Africa in the U.S., we learn about a caricatured Egypt, the HIV epidemic, the surface level effects of the slave trade, and if you went to a good school perhaps something about South African Apartheid. We also see lots of pictures of starving children on commercials, safaris on animal shows and we see pictures of vast savannahs and deserts in films and movies.
What we don’t learn about is the Great African War or Leopold’s Reign of Terror during the Congolese Genocide. Leopold II essentially turned Congo into his own personal part-plantation, part-concentration camp, part-Christian ministry, and yet history fails to retell the lessons of his tyrannical endeavor.
It seems that when you kill ten million Africans — you aren’t called ‘Hitler’, your name never comes to symbolize the living incarnation of evil, and your picture doesn’t produce fear, hatred, and sorrow — rather your crimes are simply swept under the historical rug and the victims of colonialism/imperialism remain forever voiceless

New Visa Fee for KSA effect from Oct 2, 2016

The Directorate General of Passports will begin on Sunday, the first of Muharram
of the new Hijri year 1438 AH, the implementation of the new amendments earlier approved by
the Council of Ministers this year.
The cabinet adopted these amendments after reviewing non-oil revenue initiatives submitted by the Ministries of Finance, and Economy and Planning.
The text of the new amendments to be applied starting from Sunday is as follows:
First: The one-time entry visa fee will be SR2,000, but the state will bear this fee if a visitor is coming to the Kingdom for the first time to perform Haj or Umrah.
Second: The multiple exit/re-entry visa fees will be as follows:

• SR3,000 for the six-month visa.
• SR5,000 for the one-year visa.
• SR8,000 for the two-year visa.
Third: Clauses “first” and “second” shall not affect the bilateral agreements concluded between the Kingdom and other countries. Fourth: The transit visa will be SR300.
Fifth: The departure visa fee will be SR50 for those leaving the Kingdom through seaports.
Sixth: The exit/re-entry visa fees will be as follows:
• SR200 for a single trip for two months as maximum, and SR100 for each additional month, within the limits of the duration of the residence permit’s validity.
• SR500 for multiple trips for three months and SR200 for each additional month within the limits of the duration of the residence permit’s validity.
A draft royal decree was issued for these amendments stipulate applying what is contained in the decision as of 01/01/1438 AH.

 

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...