Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Monday, 26 February 2018

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” என கூறுவோம். யாருடைய மையத்தாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் இதில் தடையிருப்பதாக தெரியவில்லை. “யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸை காரணம் காட்டி தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.
யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபி மானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.

யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச் சூழலில் பிரேதப் பரிசோதனைக்காக மையத்தின் உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோனை செய்வது என்பது வீணாக உறுப்புக்களை வெட்டி வீசுவதற்கல்ல.

இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை முறை தேவையில்லை என்றும் அது மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். சிலநேரம் மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த விடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும்தவறாகும்.
இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.

பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்துக் கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும். 

எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார். 

இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸிஸேரியன்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள். இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகளை மனிதனின் நலன் கருதி செய்யப்படுகிறன. 

நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும்போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பது தவறான வாதமாகும்.

Saturday, 3 February 2018

நில ஆவணங்களின் அவசியம்.

ஒரு சொத்து நமக்கு உரிமையானது எனச் சொல்வதற்கான ஆதாரமே ஆவணங்கள்தான்.

    அந்த ஆவணங்களில் பிழை இருந்தால் நமது உரிமை கேள்விக்குள்ளாக்கப்படும். இப்போது எல்லாம் காகிதத்தில் இருக்க வேண்டும். வெறும் வாக்கு, வாய்ச் சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அதனால் சொத்து வாங்கும்போது ஆவணங்களைச் சரிபார்ப்பது முக்கியமான விஷயம்.

நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவுசெய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது கிரயப் பத்திரம் (Sale Deed), கடன் பத்திரம் (Mortgage Deed), ஒப்பந்தப் பத்திரம் (Agreement) போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

அசல் ஆவணம் இல்லாமல் நகல் ஆவணத்தை வைத்து சிலர் சொத்தை விற்கத் துணிவார்கள். அப்படியிருக்கும்பட்சத்தில் நகல் ஆவணத்தை வைத்து இறுதி முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அசல் ஆவணம் உண்மையிலேயே தொலைந்துவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். சில விஷயங்கள் வில்லங்கச் சான்றிதழில் வராமல் போக வாய்ப்புள்ளது. அசல் ஆவணங்களை வங்கியில் வைத்துக் கடன் வாங்கியிருக்கக்கூடும். அதனால் இவற்றைத் தெளிவாக உறுதிசெய்துகொள்வது அவசியம்.

மேலும் சொத்தை விற்பவர் கொடுக்கும் ஆவணத்தையும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் ஆவணத்தையும் வாங்கிச் சரிபார்க்க வேண்டும். இரண்டிலும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்க்க வேண்டும். முக்கியமாக சர்வே எண், பத்திரப்பதிவு உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். பத்திரத்தில் உள்ள கையொப்பத்தைச் சரிபார்ப்பது அவசியம். உங்களிடம் தரப்பட்ட ஆவணம் முழுவதும் போலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

நன்றி; தி இந்து

Monday, 22 January 2018

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

சில காரியங்களை தனி ஒரு நபரால் செய்ய முடியாது. அதனைச் செய்வதற்கு பல நபர்கள் தேவைப்படும். அந்த நபர்களை சட்டபூர்வமாக ஒன்றிணைக்க சங்கம் ஏற்படுத்துவது அவசியம்.

ஒரு சங்கத்தை அமைப்பதற்கு அதிக நபர்கள் தேவையில்லை. குறைந்தபட்சம் 7நபர்கள் இருந்தால் போதும். ஆனால், அவர்களுக்கு வயது 18 ஆகியிருக்க வேண்டும்.

சங்கம் அமைத்தால் மட்டும் போதாது. அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்,1975 மற்றும் விதிகள் 1978ன்படி மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படியான அங்கீகாரத்தைப் பெறுகின்றது.

எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20ஐதாண்டிவிட்டாலோ, அதனுடைய ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூ.10,000/-த்தை தாண்டிவிட்டாலோ மூன்று மாத காலத்திற்குள் சட்டப்படி கண்டிப்பாக அதனை ஒரு சங்கமாக பதிவு செய்ய வேண்டும்.

சங்கத்திற்கு பெயர் வைத்தல்

ஒரு சங்கம் ஏற்படுத்த முதலில் அதற்கு ஒரு நல்ல பெயரை சூட்டுவது மிக அவசியம். ஆனால், சங்கத்தின் பெயர் இந்திய இறையாண்மைக்கு மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது. மேலும் வன்முறையைத் தூண்டுவதாகவோ,அறுவறுப்பானதாகவோ மற்றும் ஆபாசமாகவோ இருக்கக் கூடாது. ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற ஒரு சங்கத்தின் பெயரை மற்றோரு சங்கத்திற்கு சூட்டுவதும் கூடாது.  இதுபற்றி சங்கத்தை பதிவு செய்ய மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நீங்கள் விண்ணப்பிக்கும் போது அவர் உங்களுக்கு வழி காட்டுவார்.

பெயர் மாற்றம்

ஏற்கனவே ஒரு பெயரில் செயல்பட்டு வருகின்ற சங்கம் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தன்னுடைய பெயரை பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்படுகின்ற சிறப்புத் தீர்மானம் மூலம் பொதுக்குழு கூட்டம் நடந்த தினத்தில் இருந்து 90 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம்.

பெயர் பலகை

அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி, சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி தெளிவாக தெரியுமாறு தமிழில் எழுதி, முகப்பில் விளம்பர பெயர் பலகை மாட்ட வேண்டும். ஒருவேளை சங்கத்தின் பெயர் வேறு மொழியில் இருந்தால் அதன் உச்சரிப்பை தமிழில் எழுதி கண்டிப்பாக போர்டு வைக்க வேண்டும்.

சங்க நிர்வாகக் குழு

சங்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். சங்க துணை விதிகள் (By Laws) ஏற்படுத்தப் பட்டிருந்தால், அதில் குறிப்பிட்ட அளவின்படிதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களை பொதுக்குழுக்கூட்டம் மூலம் சங்கத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மேல் கண்டிப்பாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், சங்க உறுப்பினர்கள் மறுபடியும் சங்க நிர்வாகிகளாக இவர்களையே மீண்டும் தேர்ந்தெடுக்க எந்தவித தடையும் இல்லை.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை FORM-VII மூலமாக மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.

பொதுக்குழுக் கூட்டம்

ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்டம் கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும். சட்டப்படி கூட்டம் நடைபெறும் நாளுக்கு 21 நாட்கள் முன்னதாக உறுப்பினர்களுக்கு கூட்டம் பற்றிய அறிவிப்பானது அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பில் நாள்,இடம், கூட்டத்தின் குறிக்கோள் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு (நகல்கள்) உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். மற்றும் அதில் இயற்றப்படும் தீர்மானங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட உறுப்பினர்களால் (Quorum) ஏற்றுக் கொள்ளப்பட்டு கூட்ட நடவடிக்கை குறிப்பேடு என்ற Minutes Bookல் கையெழுத்திடப்பட வேண்டும். இதனையும் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.

உறுப்பினர்கள் மாற்றம்

உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கம் சம்பந்தமான விபரங்களை FORM-VI மூலமாக விண்ணப்பித்து மாவட்டப் பதிவாளர் அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும்.

சங்க துணை விதிகள்

சங்கத்திற்கென்று சட்டதிட்டங்களை ஏற்படுத்தி பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலோடு  சங்கத்தை நிர்வகிக்கலாம்.

மாவட்டப் பதிவாளர்

சங்க நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்களை மாவட்டப் பதிவாளர் அவர்கள் (தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்ட விதிகள் 1978 - விதி எண்: 50ன்படி) ஆய்வு செய்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
______________________________________________________________

சங்ககத்தை உருவாக்கி பதிவு பண்ணினால் மட்டும் போதாது.

சங்க தனிநிலை சட்ட விதிகளின் படி, நிர்வாகக்குழு கூட்டங்களை கூட்டி, அந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அனைத்தையும் (உறுப்பினர் எவரும் சேர்க்காத தீர்மானம்) அந்த தீர்மான தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் சங்க பதிவாளரிடம் படிவம் 7-உடன் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும்.

ஏதாகிலும் உறுப்பினர்கள் சேர்ந்தாலும், நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது அவர்கள் மறைந்தாலும், மற்றும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது சார்ந்த தீர்மான் நகலுடன், படிவும் 7-யுடன் சேர்த்து 3 மாதத்திற்குள் பதிவு செய்யப்படவேண்டும்.

சங்க வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகும்போது, தணிக்கையாளரை கொண்டு சங்க விதிகளின் படி தணிக்கை செய்து, ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம்தேதிக்குள் கூட்டி அதற்கான அறிவிப்பை ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு வழங்கி, அந்த கூட்டத்தில் அந்த தணிக்கையை ஏகமனதாக ஒப்புக்கொண்ட தீர்மானத்தையும் கீழ்கண்ட ஆவணங்களையும்31ம் தேதி மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்கவேண்டும்.

ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மானத்தில், ஒருவரை உறுப்பினராக சேர்த்தாலோ, நீக்கினாலோ, அல்லது நிர்வாகக்குழுவினர் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலோ, 31ம் தேதி டிசம்பருக்குள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டத்தின் பிரிவு 16 மற்றும் 1978 தமிழ்நாடு சங்கங்களின் பதிவு விதி 22ன் படி கீழ்கண்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

1) 2016-2017 ஆம் ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு மற்றும் இருப்புநிலை ஏடு அறிக்கை

2) 2016-2017 முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பட்டியல் - படிவம் 6

3) சங்கம் செயலாற்றி வருவதற்கான உறுதிமொழி

4) 2016-2017முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க நிர்வாகிகளின் பட்டியல்

5) 29.09.2017 அன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மான நகல்

6) உறுப்பினர்களை நீக்கியதற்கான விபரம் அடங்கிய படிவம் 7
இந்த நடைமுறையில் ஒரு முறை தவறினாலும், அதற்கு பிறகு தாக்கல் செய்யும் எந்த ஆவணங்களையும் கோப்பிற்கு எடுத்து கொள்ளமாட்டார்கள்.

அதை தனி பைலில் வைத்து வருவார்கள். பின்னர் நாம், சென்னையில் உள்ள பதிவாளர் ஜெனரல் (பதிவுத்துறைத் தலைவர்) அவர்களுக்கு  மனு செய்து, அவர்கள் வந்து நமது சங்க ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பிறகே எடுத்து கொள்வார்கள்.

எப்போது தங்கள் ஆவணங்கள் கோர்வைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையோ, அன்றே உங்கள் சங்கம் செயலிலந்த சங்கமாகிவிடுகின்றது. அதற்கு பிறகு அந்த சங்கத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு இல்லை.

உதாரணமாக, அந்த சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவோ அல்லது ஒரு வழக்கில் எதிர்வாதியாக இருக்கவோ அந்த சங்கத்திற்கு தகுதியில்லை.

இன்று இப்படி செயலலிழந்த பல சங்கங்கள், பல வழக்குகளை தாக்கல் செய்யும் வேளையில், சங்க பதிவாளருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி, பதில் பெற்று, அந்த சங்கம் செயல் இழந்து விட்டது என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்துவிட வைத்துவிடலாம்.

Sunday, 21 January 2018

புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டிய அடிப்படையான விபரங்கள்:

அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி? அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா?

’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.

 பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன.

ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட்.

டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ, மோசடியானதாகவோ, இருக்கக்கூடாது.

பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும், கூட இருக்கக்கூடாது.

ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம். எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில் நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும். பொருளாளர் ஒருவர் இருப்பார். மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள். டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும். டிரஸ்ட் செயல்படும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம்.

Wednesday, 10 January 2018

Power of Attorney என்பது என்ன? அது எதற்கெல்லாம் உதவும்?

Power of Attorney
ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.
அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) அதிகார பத்திரம் (Power of Attorney) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம்(Power) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.

Power of Attorney எதற்கெல்லாம் உதவும்:
1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.
2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.
3. சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.
4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.

Power of Attorney இரண்டு வகைப்படும்:
1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)

1. பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
இதில் Power of Attorney யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங்களில் சொத்துதொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

2. தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)
இதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.

மேற்கண்ட இரண்டிலுமே நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்குதான் Power of Attorney பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் (EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் ) இந்த விவரம் (Entry) இருக்காது. இப்படி EC-ல் entry வராத காரணத்தினால் Power of Attorney -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக்கிறதா? என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1.நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர்Power of Attorney-ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of Attorney பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (Copy of Document)விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதில் இந்த Power of Attorney ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக்கும். நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது Power of Attorney இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும்.

2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி Power of Attorney ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது. உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Power of Attorney-யிடம்செய்யக்கூடாது.
01.11.2009 -லிருந்து Power of Attorney பதிவு செய்யும் புதிய முறை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி Power of Attorney தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் விவரம் முழுவதும் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சார்பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும். இது பல மோசடிகளை தவிர்க்க உதவும். ஏனென்றால் இதன் விவரம் EC-ல் வந்து விடும்.

Power of Attorney எழுத தேவையான ஆவணங்கள்:
பவர் எழுதி கொடுப்பவர்
பவர் ஏஜன்ட் ( எழுதி வாங்குபவர் )
1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)
1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)
2. இருப்பிட சான்று (Residence Proof)
2. இருப்பிட சான்று (Residence Proof)
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
4. ரூபாய் 20க்கான முத்திரைதாள் (பத்திரம்)
4. இரு அத்தாட்சி (Two witness)


பதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை EC-ல் வராத பட்சத்தில் நாம் எப்படி அதை கண்டுபிடிப்பது ?

ஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படாவிட்டாலும் சொத்தின் Original பத்திரத்தை அடமானம் பெற்றவர் வாங்கி வைத்துக்கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய ஒப்பந்தம் செய்யும் போது Xerox copy-யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி செய்து கொண்டாலும் Original பத்திரத்தை பார்த்த பிறகு தான் கிரைய ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய ஒப்பந்தம் செய்பவரிடம் Original பத்திரத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கத் தேவையில்லை.

மேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவுசெய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லு படியாகாது என சட்டம் இருந்தால் இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுமே பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும் எல்லா விவரங்களுமே EC-ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்தில் உள்ளதா அல்லது வேறு ஒருவரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறதா என நாம்தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.





நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Billஎன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.


சட்டம் பற்றிய முன்னுரை:
பொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை, பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகபடுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகபடுத்துதல் தொடர்பான சட்டங்கள், நிலம் கையகபடுத்துதல் சட்டம்,1984 என அழைக்கப்படுகிறது.

சட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:
1. முதல் அறிக்கை:
நிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கையகப்படுத்தும் முன், அவ்வாறு கையகபடுதுவதற்கு தனக்குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் அறிவிக்க வேண்டும்.
அ. அரசிதழ் ஆணை
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.
இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், பொதுமக்களுக்கு வசதியான இடங்களில் அறிவிக்கை.
இத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட்ட அறிக்கை வெளியான நாள், அறிவிக்கை நாளாக கருதப்படும். அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடிப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

2. ஆட்சேபணைகளை விசாரணை செய்தல்:
அறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடைய அல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபணைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

நிலம் கையகபடுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகபடுத்துவது, கையகபடுத்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது அந்த இடத்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டுத்தலம், சமாதிகள் அல்லது மயானங்கள் இருப்பது போன்ற காரணங்களுக்காக நிலம் கையகபடுதுத்வதற்க்கு 
ஆட்சேபணை தெரிவிக்கலாம்.

இந்த கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்க்கு பதில் வேறு மாற்று இடத்தை கையகபடுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத்தகைய ஆலோசனைகளுக்கு மதிபளிக்கவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக உயர் மன்றத்தில் வாதாடலாம்.
அறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதை தவிர்க்கலாம்.

3. கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:
கையகபடுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்
அ. அரசிதழ் ஆணை
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.
இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், இந்த அறிக்கை அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும். இதில் கையகபடுத்தப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகபடுத்தபடும் நோக்கம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடபடவேண்டும்.

4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:
கையகபடுத்தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட்ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைகளில் உள்ள ஆட்சேபணைகளை 
தன்னிடம் குறிப்பிட்ட தேதியில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தை பயன்படுத்தும் மற்றும் சம்பந்தபட்ட அனைவருக்கும் தனித்தனியே அறிவிப்பு அனுப்ப வேண்டும். அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரிவிக்க 15 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்

5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:
சம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்ட பின் கையகபடுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகியவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரால் உறுதி அளிக்கப்படும். உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும்.

சந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப் பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில் ( கட்டாய கையகப்படுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும்.

தீர்வுக்கான வழிமுறைகள்:
எந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்?
சட்டபிரிவு 4: முதல் அறிக்கை 
சட்டபிரிவு 6: கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:
சட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உறுதி
சட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்கு பரிந்துரை
சட்டபிரிவு 28A: இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்தல்

யாரிடம்/எப்போது புகார் செய்யலாம்?
மாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியடையாவிட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை செய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆசியரை கோரலாம்.

வழக்கை எவ்வாறு பதிவு செய்வது?
சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பர். இதற்கு நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த தேவையில்லை. இழப்பீட்டை அதிகரித்தோ, அளவீடு மற்றும் பாகபடுதுத்தல் தொடர்பான ஆட்சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிகலாம். என்னினும் இழப்பீட்டு அளவை நீதிமன்றம் குறைக்க முடியாது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
இழப்பீட்டு தொகையை அதிகரித்து நீதிமன்றம் ஆணையிட்டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்பளித்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து60 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

மாற்று வழிமுறைகள்:
இந்த சட்டத்தின் கீழ் மாற்று வழிமுறைகள் இல்லை என்று இருந்தது.

ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது தொடர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 27.8.13-ந்தேதி ஒப்புதல் வழங்கி விட்டார். மசோதா பற்றியும், இது பற்றிய தகவல்கள் என்ன என்பதையும் அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நில முறைகேடுகள் சம்பந்தான விழிப்புணர்வு பதிவு

🛑⭕❌⭕❌⭕🛑🛑⭕❌⭕❌⭕🛑🛑⭕❌⭕❌⭕🛑🛑🛑⭕❌⭕❌⭕🛑
நில முறைகேடுகள் சம்பந்தான விழிப்புணர்விற்கு முதலில் நாம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
📢   📢   📢  📢  📢  📢  📢📢   📢   📢  📢  📢  📢  📢 📢   📢   📢  📢  📢  📢  📢📢   📢   📢  📢  📢  📢  📢 📢   📢   📢  📢  📢  📢  📢 📢   📢   📢  📢  📢  📢  📢
1. பட்டா என்றால் என்ன?

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறை  அளிக்கும் சான்றிதழ்.

2. சிட்டா என்றால் என்ன?
குறிப்பிட்ட நிலத்தின்பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

3. அடங்கல்:  நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

4. கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

5. கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

6. தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

7. இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

8. விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

9. ஷரத்து: பிரிவு.

10. இலாகா: துறை.

11. கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

12. வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி.இந்த விவரத்தை அறிந்து கொள்ள               உதவும் பதிவுத்துறை ஆவணம்.

13. புல எண்: நில அளவை எண்.

14. இறங்குரிமை: வாரிசுரிமை.

15. தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

16. ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

17. அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

18. சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

19. நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

20. புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

21. குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

22 . பட்டா நமது பேரில் இருந்தாலும் சிட்டாவை வைத்து என்ன செய்ய முடியும்?
     *-->*  சிட்டாவை வைத்து சாகுபடி செய்ய கூட்டுறவு வங்கியில் *பணம் பெற முடியும்*.
     *-->* சிட்டா உள்ளவர்கள் குறிப்பிட்ட சாகுபடி நிலத்திற்கு பயிர் காபீயீடு செய்ய முடியும் அதன் மூலம் மழை இல்லை சாகுபடி நஷ்டம் என்று ஏதேனும் காரணம் மூலம் கணிசமான தொகையை காப்பிட்டு அலுவலகம் மூலம் பெறலாம்.
     *-->* சிட்டா வைத்திருக்கும் நபர் சிறிது வருடங்களுக்கு பிறகு இந்த இடத்தை தான் சாகுபடி செய்ததால் உரிமை கொண்டாடும் வாய்ப்பும் உண்டு.
23. நில உரிமையாளருக்கு தெரியாமல் சிட்டா பெற முடியுமா?

ஆம், முடியும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள VAO அவர்களுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து கொடுக்கலாம். இது போன்ற முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளது.

24. சிட்டா மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதை என்பதை வில்லங்கம் பார்த்தால் தெரியுமா?

தெரியாது, வில்லங்கத்தில் பெயர் மாற்றம் , அடமானம், வாங்கியது, விற்றது விபரம் மட்டுமே இருக்கும். இதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறலாம்.














Monday, 8 January 2018

வாரிசுச் சான்றிதழ் - கேள்வியின் பதில்கள்


வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் இறந்துவிட்டால் அவரின்பெயரிலுள்ள சொத்துக்களையோ, அவருக்கு வரப்போகும் சொத்துக்களையோ அல்லது வங்கி மற்றும் வேறு வகையில் அவரது பெயரில் உள்ளஅவருடைய பணத்தையோ அவரது வாரிசுகள் பெறுவதற்கு, வழங்கப்படுகின்ற சான்றிதழே  வாரிசுசான்றிதழ்
 ஆகும்.

இறப்புச் சான்றிதழ்

இறப்புச் சான்றிதழ் இல்லாமல் வாரிசு சான்றிதழ் பெறவே முடியாது.    எனவே வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு முன் இறப்புச் சான்றிதழ் பெற்று அதன் நகலை வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இறப்புச் சான்றிதழ்  எங்கு, எப்படி பெற வேண்டும்?

சாதாரணமாக நோய்வாய்ப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால் அல்லது முதுமை காரணமாக ஒருவர் இறந்துவிட்டால்,  அவரது இறப்பை முதலில் பஞ்சாயத்து அலுவலகத்தில் அல்லது நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். இதனை அவர்  இறந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக நகராட்சி அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம்.

ஓராண்டுக்கு மேலாக இறப்பை பதியாமல் இருந்தால்...?

கோட்டாட்சியர் எனப்படும் சப்கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை  வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆர்.ஐ. எனப்படும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆய்வு செய்து உங்களுக்கு இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவார்கள்.

விபத்து மூலம் இறந்தால் ......?

ஒரு வேளை விபத்து மூலம் ஒருவர் இறந்துவிட்டால், இறந்த ஊரிலுள்ள நகராட்சியில் அவரது இறப்பை பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். விபத்து மூலம் இறந்த காரணத்தால் இறந்தவரது பிரேத பரிசோதனை அறிக்கை எனப்படுகின்ற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அரசு மருத்துவமனையில் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன்  இணைத்து இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க  வேண்டும்.

தற்கொலை செய்து கொண்டால்....?

தற்கொலை மூலம் இறந்த காரணத்தால் இறந்தவரது பிரேத பரிசோதனை அறிக்கை எனப்படுகின்ற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அரசு மருத்துவமனையில் பெற்று அதன் நகலை இணைத்து முதலில் இறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க பெற வேண்டும்.

இறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் எவ்வளவு?

21 முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் ரூ.100 (பழைய கட்டணம் ரூ.2 மட்டுமே). முப்பது நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் ரூ.200 (பழைய கட்டணம் ரூ.5 மட்டுமே). காலதாமதமாக பதிவு செய்தால் (ஓராண்டுக்கு மேல் உரிய கட்டணம் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கு குறையாத நிர்வாக நீதிபதி அவர்களின் அனுமதி ரூ.500 (பழைய கட்டணம் ரூ.10 மட்டுமே).

வாரிசு சான்றிதழ் எங்கு பெற வேண்டும்?

இந்தச் சான்றிதழை இறந்தவரது வசிப்பிடம் உள்ள பகுதியின்  வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்.ஐ. எனப்படும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கையொப்பம் பெற்று வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.   கிராம   நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய    பிறகு   வாரிசு  சான்றிதழ் வட்டாட்சியரால் உங்களுக்கு வழங்கப்படும். ஒரு வாரம் கழித்து வாரிசுச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு என்னென்ன வேண்டும்?

இறந்தவருக்கு யாரெல்லாம் வாரிசு என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்களின் முகவரிச் சான்று நகல் இணைக்க வேண்டும். அவர்கள் என்ன வகையில் வாரிசு ஆகிறார்கள் என்று குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக உள்ள ஆவண நகல்கள் இணைக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள திருமணமான ஒரு ஆண் இறந்து விட்டால்அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத மகன், மகள்கள் அவருக்கு வாரிசுகள்ஆகிறார்கள். குடும்பத்தில் உள்ள  திருமணமாகாத மகன்இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசுச் சான்றிதழ் ஒருவருக்கு எப்போது தேவைப்படுகிறது?

இறந்தவரின் பெயரில் வங்கிகளில்அல்லது நிதி நிறுவனங்களில் உள்ள சேமிப்பு அல்லதுவைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில்இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப்பலவிதங்களில் பயன்படுகிறது. மேலும், இறந்தவருடைய பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம்வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசு சான்றிதழ் தேவை .

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசாங்க பணிகளில்பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப  ஓய்வூதியம் மற்றும் பணிப்பலன்களைப் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய்ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ்அவசியமாகிறது.

எவ்வளவு நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவர் இறந்தபிற எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்து எத்தனை
நாட்களில் வாரிசு சான்றிதழ் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கப்படவேண்டும். இல்லையெனில் என்ன  காரணத்தினால் தாமதம் ஆகிறது? என்பதை விண்ணப்பதாரருக்கு அரசு அலுவலர் தெரிவிக்க  வேண்டும்.

எப்போது வாரிசு சான்றிதழ் மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து
அவர்களிடையே பிரச்சினைகள் இருந்தாலோ, தத்துஎடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமைகோரினாலோ, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச்சான்றிதழ் கேட்டாலோ  வட்டாட்சியர்
 அலுவலகம் வாரிசுச்சான்றிதழை தர மறுக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச்சான்றிழ் வழங்கவேண்டும்? என உத்தரவு  பெற்று வரச்சொல்லலாம். ஒருவர் பல வருடங்களாக காணாமல்போயிருந்தாலும் வாரிசு சான்றிதழ் பெறலாம்!

ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கு மேல்ஆகிவிட்டிருந்தால் அவர் கண்டிப்பாக திரும்பி வந்துவிடுவார்என்று நம்புவது, அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையேதவிர, அது வட்டாட்சியரை எந்தவிதத்திலும்
 பாதிக்காது. அப்படிக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவு வாயிலாக, ‘அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்துமீதியுள்ளவர்களின் பெயர்களோடு
வாரிசுச் சான்றிதழ் பெறமுடியும்.
இன்றியமையாதது வாரிசு சான்றிதழ் ஒருவர் இறந்த பிறகு அவரின் பணம் மற்றும் சொத்துக்களைஅவருடைய வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கும்,அவர்களிடையே பிரச்சனைகள் ஏதும்  ராமலிருப்பதற்கும்வாரிசுச் சான்றிதழ் அவசியம் ஆகிறது. இந்த வாரிசுச் சான்றிதழ்சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் அனைவருக்கும் தேவைப்படுவதால், இது இன்றியமையாதசான்றிதழாகக் கருதப்படுகிறது.

வட்டாட்சியரின் பங்கு

வட்டாட்சியர் வழங்கும் வாரிசுச் சான்றிதழில்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரேமுழுப் பொறுப்பு ஆவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர்பெயர் விட்டுப்போயிருந்தாலோ அது பின்னாளில் ஒருபிரச்சினையானாலோ அதற்கு வட்டாட்சியரே முழுப் பொறுப்பு ஆவார். எனவே தான் வட்டாட்சியர்கள் இச்சான்றிதழ்  ளிப்பதில்அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

வாரிசு சான்றிதழ் விண்ணப்பப்படிவம் எங்கு கிடைக்கும்?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர்அலுவலகங்களில் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கிறது. இணைய தளத்தில் கீழ்காணும்முகவரிக்குச் சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf

இருந்தாலும், அந்த விண்ணப்பத்தில் உள்ள வாரிசுகள் பட்டியலை மட்டும் டைப்பிங் செய்து இணைப்பது நல்லது.

வாரிசுச் சான்றிதழ்களில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன?

இப்போது உள்ள வாரிசுச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தில் முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இது  குழப்பத்தை விளைவிக்கும். எனவே இறந்தவர்களின் வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம்நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் எனஅனைத்துத் தகவல்களும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

Wednesday, 3 January 2018

உயிலும் மரண சாசனமும் - Law of Wills

இஸ்லாம் அனுமதிக்கின்ற வஸிய்யத் என்ற மரண சாசனத்திற்கு உயில் என்று விளக்கம் அளித்தாலும், இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. (LAW OF WILLS) தன்னாணை, அல்லது விருப்புறுதிச் சட்டத்தைத் தான் உயில் என்கிறோம். இங்கிலாந்தில் உயில்களுக்கான சட்டம் கி.பி.1837ல் இயற்றப்பட்டது. இந்து சாஸ்திரங்களில் உயில் என்பதே தெரியாத ஒன்று. அதை ஒரு புதிராகக் கருதினார்கள்.

கூட்டுக் குடும்பத்திட்டம், தத்து எடுக்கும் பழக்கம் ஆகியவற்றால் பழங்கால இந்தியாவில் உயில் மூலம் சொத்துரிமை வழங்கும் பழக்கம் அறவே இல்லாமல் இருந்தது. ஆனால் உயிலுக்கு மாற்றாக, அல்லது நெருக்கமாக அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்து விருப்புறுதிகளின் சட்டம், இந்து வழியுரிமை மற்றும் வாரிசு சட்டத்தின் ஒரு பாகமே. நீதிமன்றங்களும் கூடுமானவரை இந்து விருப்புறுதிகளுக்கு கொடையளிப்பதற்கான சட்டத்தையே பயன்படுத்தி வந்தன. 1870-ம் ஆண்டில் தான் இந்து உயில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

உயில் என்றால் என்ன ? ஒரு மனிதன், தான் இறக்கும் தருவாயில் தன் எண்ணங்களை ஒரு சாசனம் மூலம் தெரிவிப்பதே உயில் எனப்படுகிறது. இதனை இஸ்லாத்தில் வஸிய்யத் என்போம். 1.உயில், அதை எழுதியவரின் எண்ணத்தைச் சட்டப்படி வெளிப்படுத்தியதாகவும், அவரது சொத்துக்களைப் பற்றியதாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து வேறுவகையான எண்ணங்களை வெளிப்படுத்தினால் அது செல்லாது. உதாரணமாக, தான் இறந்த பிறகு தன் மனைவி தத்து எடுக்கலாம் என்று எழுதினால் அது உயில் ஆகாது.2. சொத்து மாற்ற ஏற்பாடு(DISPOSITION)அவசியம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் உயில் செல்லும்.

3. உயில், ஆவணத்தில், அதை எழுதுபவரின் எண்ணத்தை தெளிவான சொற்களால் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தியாவில் உயில் ஆவணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புருஷோத்தம்-ஏ.கே.ஷேதாஸ் வழக்கில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 சாசனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கும், உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல என்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம் என அந்த வழக்கில் கருத்து தெரிவிக்கப்பட்டது. உயில் என்பது, மிகவும் அமைதியான, அவசியமான நேரங்களில் தயாரிக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகும். எனவே, இறப்பின் பிடியில் இருக்கும் ஒரு மனிதன் உயிருடன் இருப்பவரிடம் தன் விருப்பங்களை நிறைவேற்றுமாறு தெரிவித்தால், உயில் எழுதக்கூடியவர் புத்தி சுவாதீனம் உள்ளவராகவும்,தகுதி படைத்தவராகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 லச்சோபிலி(எ) கோபிநாராயன் என்கிற வழக்கில்

உயில் எழுதியவர் நீரழிவு நோய் காரணமாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தன் ஒரே மகனின் இறப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தார். மனநோயாளி போல காணப்பட்டார். இந்நிலையில் மேல்முறையீட்டாளர்கள் சார்பில் மோதிலால் நேரு என்பவர் வாதிடும் போது, உயிலை உறுதி செய்து கூறுபவர்கள் தாம் அதை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்தை, தன் இறப்பிற்குப் பிறகு யார் அடைய வேண்டும் என்பது குறித்து எழுதும் சாசனமே உயிலாகும்.

 உயில் எழுதுவதற்கு கீழ்க்கண்ட ரத்துக்கள் பின்பற்றப்பட வேண்டும்.

 1. அது எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.

2.உயில் எழுதுபவரால் கையயழுத்திடப்பட்டிருக்க வேண்டும்.

3. குறைந்த பட்சம் இரு சாட்சிகளின் கையயழுத்து இருக்க வேண்டும்.

    ஆனால், முஸ்லிம்களின் மரண சாசனத்திற்கு (வஸிய்யத்) இந்த நிபந்தனைகள் தேவையில்லை. உயிலுக்கும், வஸிய்யத்திற்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சொத்துரிமை பெறும் வாரிசுகளுக்கு வஸிய்யத் மூலம் சொத்து கொடுக்க முடியாது. இதை அறியாமல் அவர் வஸிய்யத் செய்திருந்தால், மற்ற வாரிசுதாரர்கள் இசைவு தெரிவித்தால் மட்டுமே அது செல்லபடியாகும்.

முஸ்லிமல்லாதோர் உயில் எழுதினால், யாருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தன் இறப்புக்குப் பின் சொத்துக்கள் அடையுமாறு எழுதி வைக்கலாம்.

 ஆனால் இஸ்லாமியச் சட்டப்படி உயில் (வஸிய்யத்) எழுதும் போது, உயில் அளிப்பவர் தன் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயில் வழிக்கொடை அளிக்க முடியும். இறந்த பின் ஏற்படும் செலவுகள், முன்புள்ள கடன்கள் ஆகியவை போக மீதி இருப்பதே உயில் எழுதியவரின் சொத்தாகக் கருதப்படும்,

 ஹிபா என்னும் அன்பளிப்பு சாசனத்தில் உடைமையளித்தல் பொருளுக்கு உரியவர் இறந்த பின்பே உடைமையளித்தல் நிகழும்.

 அப்துர் கபூர்-அப்துர்ரஸ்ஸாக்(1959) என்ற வழக்கில்

ஒரு தந்தையும் அவரது மகன்களும் சேர்ந்து ஒரு பாகப்பிரிவினைப் பத்திரம் எழுதினார்கள். தந்தை இறந்த பின்னர் அவருடைய இரு புதல்வர்கள் பத்திரத்தில் குறிப்பிடப்படாத சொத்துக்களின் உரிமை கொண்டாட முடியாது என்றும், அந்தச் சொத்துக்களை பத்திரத்தில் பார்ட்டிகளாக இல்லாத அவருடைய மற்ற மூன்று புதல்வர்களும் அடைவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தையின் மறைவுக்குப் பிறகு மேற்சொன்ன வாரிசுதாரர்களான இரு புதல்வர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்காததால் இந்த ஆவணம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், வாரிசுதாரர்கள் ஒரு முறை தங்கள் ஒப்புதலை அளித்து விட்ட பிறகு அதை வாபஸ் பெற முடியாது. (ஹனபி).

ஒரு முஸ்லிம் மூன்றில் ஒரு பங்குக்கு மேல், வாரிசு அல்லாத ஒருவருக்கு எழுதினாலும் வாரிசுதாரர்கள் ஒப்புதல் தந்தால் அந்த உயில் ஆவணம் செல்லும்.

 ஒரு முஸ்லிம், இஸ்லாமிய பிரார்த்தனை தலங்களுக்கு அல்லாமல் மற்ற சமய பிரார்த்தனைக் கூடங்களுக்கு உயில் மூலம் சொத்துகள் எழுத முடியாது.

பள்ளிவாசல் கட்டுவதற்காக சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைச் செலவிடலாம் என்று ஒருவர் உயில் எழுதலாம்.

வயது வந்தவர்களே உயில் எழுத முடியும். உயில் மூலம் எந்தச் சொத்துக்களைக் கொடுக்க விரும்புகிறாரோ அந்தச் சொத்துக்களுக்கு அவர் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும். உயில் எழுதும் போது அந்தச் சொத்துக்கு அவர் உரிமை பெற்றவராக இல்லாவிட்டாலும், அவர் இறந்த பிறகாவது அந்தச் சொத்தின் உரிமையை அவர் பெற்றாக வேண்டும்.

ரீ அத் சட்டப்படி ஒரு முஸ்லிம் தற்கொலை செய்வது கூடாது. எனவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உயில் எழுதப்பட்டிருந்தால் அது செல்லாது. உதாரணமாக, உயில் எழுதுவதற்கு முன் வித்தை வாங்கி வந்து, பின்னர் உயில் எழுதினார் என நிரூபிக்கப்பட்டால் அந்த உயில் செல்லாது. உயில் எழுதிய பிறகே விம் வாங்கி வந்தார் என நிரூபிக்கப்பட்டால் உயில் செல்லும்.

உயில் சாசனத்தின் வாசகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாய்மொழியாகவோ, எழுத்துமூலமாகவோ அவருடைய எண்ணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். முத்திரைத்தாளில் தான் எழுத வேண்டும் என்றோ, பத்திரப் பதிவு செய்துதான் ஆக வேண்டும் என்றோ அவசியமில்லை. கடிதங்களும், குறிப்புகளும் கூட சில சந்தர்ப்பங்களில் உயிலாக ஏற்கப்பட்டிருந்தது.

உயில் சாசனத்தை யார் எழுதினாரோ அவரது கொலைக்குக் காரணமாக இருந்தவருக்கு உயில் வழிச் சொத்து கிடையாது. அவரது பெயர் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சரியே. பிறக்காத குழந்தைக்கு உயில் வழிக்கொடை அளிக்க முடியாது. கருவில் உள்ள குழந்தைக்கு எழுதி வைக்கலாம். ஆனால், எழுதி வைத்த அந்தச் சொத்து அந்த குழந்தைக்கு கிடைக்கும்.

உயில் எழுதியவர் இறந்த பிறகு உடனடியாக உடைமை மாற்றம் ஏற்படாது போனால் செல்லுபடியாகாது. எனவே, தன்னுடைய புதல்வரின் வாழ்நாளைக்கு பின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை வேறு ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருந்தால், அது செல்லாது. இரண்டில் ஒன்று என்ற முறையில் விருப்புறுதி வாயிலாக அளித்தால் அது செல்லும். எடுத்துக்காட்டாக முபாரக்கிற்கோ, அல்லது அபூயூசுப்பிற்கோ என்று உயில் எழுதப்பட்டிருந்தால், உயில் எழுதியவர் இறந்த சமயத்தில் (முதலில் குறிப்பிட்ட) முபாரக் உயிரோடு இருந்தால் அவருக்கே சொத்து கிடைக்கும். உயில் எழுதியவருக்கு முன்னரே முபாரக் என்பவர் இறந்து விட்டால் உயில் வழிச் சொத்தை அபூயூசுப் அடைவார்.

´ஷியா முஸ்லிம்கள் சட்டப்படி மற்ற வாரிசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, தான் விரும்பிய எவருக்கும் ஒருவர் உயில் எழுதலாம். அது வாரிசுதாரராகவே இருந்தாலும் கூட செல்லும். ஆனால் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதே போல் கருவில் இருக்கும் குழந்தைக்கு உயில் எழுதி வைத்தால் 10 சந்திர மாதங்களுக்குள் குழந்தை பிறந்தாலும் உயில் செல்லும் என்பது´யாக்களின் சட்டமாகும்.

மர்ளுல் மவ்த் எனப்படும் மரணப்படுக்கையில் உள்ள ஒருவர் அன்பளிப்பு கொடுக்க இஸ்லாமியச் சட்டத்தில் அனுமதி உண்டு. ஆனால் அது வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். வாதநோயா, நாட்பட நீடிக்கும் எந்த நோயுமோ மரண நோயாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக, மரணப்பிணியின் காலக்கெடு ஓராண்டுக்காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. (ஹிதாயா). இறந்து விடுவோம் என்ற நிலையில், பிரதிபலன் எதிர்ப்பார்க்காமல் அளிக்கும் அன்பளிப்பிற்கே மரணப் பிணியின் தாக்கத்தால் அளிக்கும் அன்பளிப்புக்குள்ள கட்டுப்பாடுகளும், விதிகளும் பொருந்தும்.

உயில் எழுதும் முறை

பொதுவாக உயில் பத்திரம் பின்வருமாறு அமையலாம்…

……… ஊரில் வசிக்கும் முஸ்லிமான …. என்பவரின் மகன், மகள் ……….. என்பவரான நான் உடல் நலத்துடனும், சுய நினைவுடனும் என்னுடைய இறுதி விருப்புறுதியாக (உயிலாக) அல்லது மரணசாசனமாக இதை எழுதுகிறேன்.

இப்படி ஆரம்பித்து, அவர் விரும்பக் கூடிய விதத்தில் உயில் வாசகத்தை எழுதலாம். உதாரணமாக ….

நான் இதன் மூலம் இதற்கு முன்னால் எழுதியிருக்கும் எல்லா சாசனங்களையும் ரத்துச் செய்கிறேன். எனக்கு ஆண் வாரிசுகள் இல்லை. ஆனால் என்னுடைய மகள் ………….. என்பவருக்கு ஆண் குழந்தை உண்டு. அவரது பெயர் ………………. இவர் என்னுடைய காரியங்களை மிகவும் பொறுப்புடன் என் அன்புக் கட்டளையை ஏற்று செயல்பட்டு வருகிறார். என்னைக் கவனிப்பதற்காகவே வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்தும் செல்லாமல், என் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமியச் சட்டப்படி நான் இறந்து விட்டால் என் மகளும மற்றவர்களும் உயிரோடு இருக்கும் போது என் பேரன் என் சொத்துக்கு வாரிசாக முடியாது. எனவே, என் பேரன் ……….. பேரில் எனக்குள்ள பாசத்தின் காரணமாகவும், மனநிறைவுக்காகவும் என்னை அவன் பொறுப்புடன் கவனித்து வருவதாலும் என் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை கீழ்கண்ட இரு சாட்சிகள் முன்னிலையில் இந்த உயில் மூலம் என் பேரன் ………….க்கு நான் அன்பளிப்பாக அனுபவிக்கும்படி எழுதி வைக்கிறேன். இந்த உயில் ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் என் மொத்த சொத்துக்களில் மூன்றில் ஒரு பாகச் சொத்துக்கள் என் வாழ்நாளுக்குப் பின்னால் மேற்சொன்னபடி அமலுக்கு வரவேண்டியதாகும். என் ஆயுளுக்குள் இதை மாற்றவும், ரத்துச் செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு.

சாட்சிகள் ஒப்பம் …

1. ………………..

2. ………………

இருப்பினும், இஸ்லாமியச் சட்டப்படி விருப்புறுதி ஆவணத்தில், ஒருவர் தன்னுடைய விருப்பத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருந்தால் அந்த ஆவணத்தில் அவர் கையயழுத்து இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதேபோல அவர் கையயழுத்து போட்டிருந்தாலும் சாட்சிகள் கையயழுத்திட்டு உறுதி செய்ய வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. கடிதம் கூட உயிலாக ஏற்கப்படலாம். ஒரு முஸ்லிம் தன் ஏஜண்டுக்கு கடிதம் எழுதி, தன் வாழ்நாளுக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்களை எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அந்தக் கடிதமே உயிலாக ஏற்கப்படும்.

கோடிஸில்(CODICIL)என்பது மரண சாசன ஒப்பந்தத்தைக் குறிக்கும். ஒரு வழக்குரைஞர் தன் கட்சிக்காரரின் வேண்டுகோளுக்கிணங்க உயில் எழுதி அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். அஞ்சலில் வந்த உயிலைப் படித்துப்பார்த்த அந்த நபர் சில திருத்தங்களைக் குறிப்பிட்டு தந்தி மூலம் தெரிவித்தார். அதையடுத்து ஒரு விவரமான கடிதமுமம் எழுதி அனுப்பினார். தந்திச் செய்தியும், விளக்க மடலும் உயிலின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.

இந்துச் சட்டத்தில் இருப்பதைப் போல, முழு சொத்துக்களையும் உயில் மூலம் ஒரு முஸ்லிம் கொடுக்க முடியாது. மூன்றில் ஒரு பங்கு தான் எழுதி வைக்க முடியும். அதுவும் வாரிசு அல்லாதவர்களுக்குத்தான் எழுத முடியும். அப்படியே வாரிசுகளில் ஒருவருக்கு உயில் எழுதினால் மற்ற வாரிசுகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே அது செல்லும் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்பான சட்டமாகும்.

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...