🛑⭕❌⭕❌⭕🛑🛑⭕❌⭕❌⭕🛑🛑⭕❌⭕❌⭕🛑🛑🛑⭕❌⭕❌⭕🛑
நில முறைகேடுகள் சம்பந்தான விழிப்புணர்விற்கு முதலில் நாம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
📢 📢 📢 📢 📢 📢 📢📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢 📢
1. பட்டா என்றால் என்ன?

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறை அளிக்கும் சான்றிதழ்.
2. சிட்டா என்றால் என்ன?
குறிப்பிட்ட நிலத்தின்பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
3. அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
4. கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
5. கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
6. தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
7. இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
8. விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
9. ஷரத்து: பிரிவு.
10. இலாகா: துறை.
11. கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
12. வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி.இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
13. புல எண்: நில அளவை எண்.
14. இறங்குரிமை: வாரிசுரிமை.
15. தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
16. ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
17. அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
18. சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
19. நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
20. புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
21. குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
22 . பட்டா நமது பேரில் இருந்தாலும் சிட்டாவை வைத்து என்ன செய்ய முடியும்?
*-->* சிட்டாவை வைத்து சாகுபடி செய்ய கூட்டுறவு வங்கியில் *பணம் பெற முடியும்*.
*-->* சிட்டா உள்ளவர்கள் குறிப்பிட்ட சாகுபடி நிலத்திற்கு பயிர் காபீயீடு செய்ய முடியும் அதன் மூலம் மழை இல்லை சாகுபடி நஷ்டம் என்று ஏதேனும் காரணம் மூலம் கணிசமான தொகையை காப்பிட்டு அலுவலகம் மூலம் பெறலாம்.
*-->* சிட்டா வைத்திருக்கும் நபர் சிறிது வருடங்களுக்கு பிறகு இந்த இடத்தை தான் சாகுபடி செய்ததால் உரிமை கொண்டாடும் வாய்ப்பும் உண்டு.

23. நில உரிமையாளருக்கு தெரியாமல் சிட்டா பெற முடியுமா?
ஆம், முடியும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள VAO அவர்களுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து கொடுக்கலாம். இது போன்ற முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளது.
24. சிட்டா மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதை என்பதை வில்லங்கம் பார்த்தால் தெரியுமா?
தெரியாது, வில்லங்கத்தில் பெயர் மாற்றம் , அடமானம், வாங்கியது, விற்றது விபரம் மட்டுமே இருக்கும். இதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறலாம்.
No comments:
Post a Comment