Saturday, 24 September 2016

எது அழகு ?

ஒரு நாள் ஒருவன் குயிலிடம் சென்று கேட்டான் " நீ மட்டும் கருப்பா இல்லைனா எவ்ளோ நல்லா இருக்கும் ",

கடலிடம் கேட்டான் " நீ மட்டும் உப்பா  இல்லைனா எவ்ளோ நல்லா இருக்கும் ",

கடைசியாக 

ரோஜாவும் கேட்டான் "உன்னிடம் முட்கள் மட்டும் இல்லை என்றால் எவ்ளோ நல்லா இருக்கும் என்றான்"

அப்போது அந்த மூன்றும் ஒன்று சேர்ந்து சொன்னது "ஏ மனிதா! உன்னிடம் மட்டும் பிறரின் குறை பிடிக்கும் பழக்கம் இல்லைனா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்...

பிறரின் குறை காணா  மனிதன் என்றுமே அழகுதான்


அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் யாது? -- உங்களுக்கு உதவும் சட்டங்கள்:-


1. சமத்துவ உரிமை (பிரிவு 14-18)
2. சுதந்திர உரிமை (பிரிவு 19-22)
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)
4. சமய உரிமை (25-28)
5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30)
6. தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25)

சமத்துவ உரிமை
பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் கூடாது.
பிரிவு 15 – எந்த குடிமகனையும் மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதனையாவது காரணம் காட்டி அவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.
பிரிவு 16 – பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
பிரிவு – 17 தீண்டாமை ஒழிப்பு: தீண்டாதோர் என்று யாரையும் ஒதுக்கி வைத்தல் இச்சட்டத்தின் மூலம் அழிக்கப்படுகிறது. தீண்டாமை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தடுக்கிறது. தீண்டாமையின் மூலம் தகுதியிண்மை கடைப்பிடிக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்.

சுதந்திர உரிமை
பிரிவு 19 அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகள்
அ.   பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்
ஆ.   ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்
இ.   குழுக்கள் – சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்
ஈ.   இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்
உ.   நாட்டின் எந்தப்பகுதியிலும் சென்று தங்கி வாழ உரிமை.
ஊ.   எந்தத்தொழில், வேலை, வணிகம் மற்றும் வியாபாரம் செய்யும் சுதந்திரம் (மேற்கண்ட சுதந்திர உரிமை சில கட்டுப்பாடுகளைக் கொண்டது அவைகள் பற்றி பிரிவு 19 (2) முதல் (6) வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன)

பிரிவு 20
அ.   ஒரு குற்றமென குற்றம் சாட்டப்பட்ட செயல் செய்யப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டத்தினை மீறிய குற்றத்தைத் தவிர வேறு எந்த குற்றத்திற்காகவும் ஒரு நபர் தண்டிக்கப்படக்கூடாது.
ஆ.   எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒரு முறைக்குமேல் குற்ற வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படக்கூடாது.
இ.   எந்த நபரையும் அவருக்கு எதிரான வழக்கில் ஓர் சாட்சியாய் அவரை இருக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.

பிரிவு 21.
எந்த நபரின் வாழ்க்கையையோ அல்லது தனி நபர் சுதந்திரத்தையோ சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர பிற வழிகளில் மீறப் படக் கூடாது.

பிரிவு 22 கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு
அ.   கைது மற்றும் தடுப்புக் காவலுக்கான காரணங்களை உடனே தெரிவிக்க வேண்டும். வழக்கறிஞரை கலந்தாலோசிக்க அவருக்கு உரிமை உண்டு.
ஆ.   3 மாதத்திற்குள் அறிவுரைக்கு குழுமத்தின் முன், தடுப்புக் காவலை உறுதிப்படுத்த வேண்டும்.
இ.   தடுப்புக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உரிமை.

பிரிவு 23 சுரண்டலுக்கு எதிரான உரிமை.
மனித உடல் உறுப்புக்களை வியாபாரம் செய்வதையும், பிச்சை எடுக்க வைப்பதும் கட்டாய வேலை வாங்குவதையும் தண்டிக்கக் தக்க குற்றமாக சட்டம் கூறுகிறது.

பிரிவு 24: 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த நிறுவனத்திலும் அல்லது வேறு தொழிலகம் எதிலும் வேலைக்கு வைக்கக் கூடாது.

25) சொத்துரிமை – கல்வியுரிமை – அடிப்படை உரிமைகள்?
சொத்துரிமை ஓர் அடிப்படை உரிமையாக பிரிவு 19 (1)ல் வைக்கப்பட்டு பின் 44வது சட்டத்தின் கீழ் நீக்கம் செய்யப்பட்டது. பிரிவு 300 இன் கீழ் சொத்துரிமை ஓர் சாதாரண உரிமை என்ற அளவில் தற்பொழுது சட்டத்தால் கூறப்படுகிறது.
கல்வியுரிமை ஓர் அடிப்படை உரிமையாக இருந்தது. பின்னர் அது ஆரம்பக் கல்விக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டது.

How To Say "NO"?

நண்பர் ஒருத்தர், இவ்வளவு நாள் சென்னையில் இருக்கிறாயே என்ன கற்றுக் கொண்டாய் எனக் கேட்டார். அவருக்கு நான் உடனடியாக ஒற்றை வரியில் பதிலைச் சொல்லி விட்டேன். அது என்னவென்று சொல்வதற்கு முன்பாக இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.
அந்த நண்பர் ஒரு அப்பாவி. அவருடைய குடும்பத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. அவருடைய பிரச்சினையெல்லாம் சுற்றத்தினர்தான். நண்பரிடம் தொலைபேசி செய்து எந்த உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லவே மாட்டார். பண்ணிடலாம், சிறப்பா செஞ்சிடலாம் என்பார். அதற்காக ...அவர் பல்வேறு வகைகளில் மெனக்கெடுவார். அவரையும் மீறி அவர் பிறருக்காக ஒத்துக் கொண்ட பணிகளை முடிக்க முடியாத நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கும் உள்ளாவார். அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தவர்களில் பெரும்பாலான பேர்களிடம் அவர் அது சம்பந்தமாக கெட்ட பெயரையே பெற்றிருக்கிறார். அவரால் எதையும் எதற்காகவும் மறுத்துப் பேச முடியாது. முகதாட்சண்யம் பார்க்க வேண்டியிருக்கிறதே என்பார் அப்பாவியாய். ஒருகட்டத்தில் இந்தப் பிரச்சினையின் நிமித்தமாக அவர் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டார். சிலருக்கு உதவி செய்ய வேண்டி கடன் சுழலிற்குள்ளும் மாட்டிக் கொண்டார். இது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. நம்மால் எல்லாமே முடியும் என்கிற நிலையைத் தாண்டி, நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற இடத்திற்கு நகர்வது மிக முக்கியமானது. நம்முடைய காலணியின் அளவு நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒருமுறை கலைஞரிடம் நீங்கள் பிரதமராவதில் என்ன தடையிருக்கிறது என்று கேட்டபோது, அவர் உடனடியாகச் சொன்ன பதில், “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்”. அந்தத் தெளிவைப் பெறுவதற்காகத்தான் ஆண்டாண்டு காலம் உழைக்க வேண்டியிருக்கிறது.
நண்பரிடம் நான் சொன்ன பதில்; “How To Say NO".


----படித்ததில் பிடித்தது ---

Sunday, 18 September 2016

சவுதியில் 7 வகையான சேவைக்கு மானியம் ரத்தாக வாய்ப்பு

RIYADH:

The government is expected to remove subsidies on seven services and enforce the new visa regime, besides the fees on municipal services, with effect from the new Hijri year, corresponding to Oct. 2.
The government had subsidized the seven services by 50 percent and the same was extended by the Cabinet three years ago, local media reported on Saturday.
The seven services that will no more be subsidized are ports, passports, car driving license, car transfer, traffic violations, renewal of residence permits (iqama) for domestic workers and tariff (customs) protection for 193 commodities.
In August, the Cabinet approved imposition of fees on municipal services and asked the Minister of Municipal and Rural Affairs to issue, within 90 days of the issuance of the decision, by-laws and necessary decisions to implement the fees. The minister was also asked to introduce a schedule taking into account gradual implementation of the decision with the right to delay or stop such municipal charges in certain cases.
In the same month, the Kingdom also decided to raise the fees for visa and traffic violations in response to initiatives offered by the Ministries of Finance, Economy and Planning to boost state revenues.
Under the new rules, the entry visa fee has been fixed at SR2,000. However, first-time Umrah pilgrims have been exempted from the rule.
A six-month multiple-entry visa will cost SR3,000, 12-month visa SR5,000 and 24-month visa SR8,000. A transit visa will cost SR300. The exit-reentry visa for six months will cost SR600.

Source: Arab News

http://www.arabnews.com/node/985906/saudi-arabia

Saturday, 10 September 2016

உலக நீதி

குற்றவாளி பணம்படைத்தவனாகவும்,
நிரபராதி ஏழையாகவும் இருக்கும்'பட்சத்தில் தீர்ப்பு என்ற பெயரில் ஏழை நசுக்கப்படுகின்றான்😡.

Thursday, 8 September 2016

நிதர்சனம்

"ஆற்றில் தண்ணீர் அலைமோதி ஓடினாலும் நாய்க்கு தாகம் வந்தா  நக்கி தா குடிக்கும்"
- யாரோ

காவேரி ஆறு - ஒரு வரலாற்று பதிவு

நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும்,  அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது. அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது. அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது. கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான். ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.

சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.

ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து  வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.

நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும். உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.

சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

- நம்பிக்கை ராஜ் #Cauvery

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...