Saturday, 27 August 2016

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.

அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது.

இதில் ஒருவரது வாட்ஸ்அப் அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும்.

பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்று தேர்வு செய்தவர்களுக்கு இப்போது பிரச்சனை இல்லை.

எபோதும் போல எதையும் படிக்காமல் “I Agree” என்று தேர்வு செய்தவர்களுக்கு 30 நாள் கேடு கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.

இதற்குள் தங்களது தேர்வை மாற்றிக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

*உங்களது தெரிவை மாற்ற வேண்டுமென்றால்: Whatsapp > Settings > Account > சென்று “Share My Account Info” தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.*

இருந்தாலும் ஃபேஸ்புக்கின் இந்த நிலை பலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

பலர் வாட்ஸ்அப் இல் இருந்து விலகி டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவருக்காக சவுதி அரசின் புதிய வலைத்தளம்

சௌதி அரேபிய அரசு புதிதாக ஒரு வலை தளத்தை ஆரம்பித்துள்ளது. இவ்வலை தளம், வேலையை இழந்துள்ள, திறம் படைத்த, வேலை தேடும் வெளி நாட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சௌதி அரசு இரு தரப்பான நன்மையை எதிர் பார்க்கிறது.

ஒன்று, புதிய விசாக்கள் வழங்குவது குறையும்.

இரண்டு, இதனால், வேலை இழந்து தவிக்கும் தகுதி படைத்த வெளி நாட்டினர் வேலை பெறுவர்.

இது நிகாதத் திட்டத்தின் கீழ் பச்சை நிற தரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பயன் பெற உதவும். இதன் மூலம், அந்நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குத் தேவையான வெளி நாட்டு வேலையாட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசின் செய்தித் தொடர்பாளர் அபா அல் கைல் தெரிவித்துள்ளார்.

இந்தப் பக்கத்தின் பெயர், கவாதிர் லேபர் (Kawadir Labor) என்பதாகும்.

https://www.kawadir.com.sa/en/jobs/companies/

https://www.kawadir.com.sa/en/employers/

வைத்தியம்

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.
தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.
தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.
தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5.
வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6.
உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.
அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8.
குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.
வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10.
வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

Inspiration Video - Story of Rabbit & Turtle


கல்வி என்றால் என்ன?

கல்வி என்றால் என்ன ?

ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும்.

கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து வழிநடத்துவார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு கூறுகளில் உள் நுழைகிற கருத்துருக்கள் கற்பவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால் கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.

இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.

இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளது. பெருகி வரும் மக்கட்தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....



கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. 

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள். தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

இன்றைய சூழலில் கடந்த இருபது ஆண்டுகளாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. இந்த மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை. இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். 

பொள்ளாச்சி நசன்

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...