Monday, 8 January 2018

வாரிசுச் சான்றிதழ் - கேள்வியின் பதில்கள்


வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் இறந்துவிட்டால் அவரின்பெயரிலுள்ள சொத்துக்களையோ, அவருக்கு வரப்போகும் சொத்துக்களையோ அல்லது வங்கி மற்றும் வேறு வகையில் அவரது பெயரில் உள்ளஅவருடைய பணத்தையோ அவரது வாரிசுகள் பெறுவதற்கு, வழங்கப்படுகின்ற சான்றிதழே  வாரிசுசான்றிதழ்
 ஆகும்.

இறப்புச் சான்றிதழ்

இறப்புச் சான்றிதழ் இல்லாமல் வாரிசு சான்றிதழ் பெறவே முடியாது.    எனவே வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு முன் இறப்புச் சான்றிதழ் பெற்று அதன் நகலை வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இறப்புச் சான்றிதழ்  எங்கு, எப்படி பெற வேண்டும்?

சாதாரணமாக நோய்வாய்ப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால் அல்லது முதுமை காரணமாக ஒருவர் இறந்துவிட்டால்,  அவரது இறப்பை முதலில் பஞ்சாயத்து அலுவலகத்தில் அல்லது நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். இதனை அவர்  இறந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக நகராட்சி அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம்.

ஓராண்டுக்கு மேலாக இறப்பை பதியாமல் இருந்தால்...?

கோட்டாட்சியர் எனப்படும் சப்கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை  வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆர்.ஐ. எனப்படும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆய்வு செய்து உங்களுக்கு இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவார்கள்.

விபத்து மூலம் இறந்தால் ......?

ஒரு வேளை விபத்து மூலம் ஒருவர் இறந்துவிட்டால், இறந்த ஊரிலுள்ள நகராட்சியில் அவரது இறப்பை பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். விபத்து மூலம் இறந்த காரணத்தால் இறந்தவரது பிரேத பரிசோதனை அறிக்கை எனப்படுகின்ற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அரசு மருத்துவமனையில் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன்  இணைத்து இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க  வேண்டும்.

தற்கொலை செய்து கொண்டால்....?

தற்கொலை மூலம் இறந்த காரணத்தால் இறந்தவரது பிரேத பரிசோதனை அறிக்கை எனப்படுகின்ற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அரசு மருத்துவமனையில் பெற்று அதன் நகலை இணைத்து முதலில் இறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க பெற வேண்டும்.

இறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் எவ்வளவு?

21 முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் ரூ.100 (பழைய கட்டணம் ரூ.2 மட்டுமே). முப்பது நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் ரூ.200 (பழைய கட்டணம் ரூ.5 மட்டுமே). காலதாமதமாக பதிவு செய்தால் (ஓராண்டுக்கு மேல் உரிய கட்டணம் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கு குறையாத நிர்வாக நீதிபதி அவர்களின் அனுமதி ரூ.500 (பழைய கட்டணம் ரூ.10 மட்டுமே).

வாரிசு சான்றிதழ் எங்கு பெற வேண்டும்?

இந்தச் சான்றிதழை இறந்தவரது வசிப்பிடம் உள்ள பகுதியின்  வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்.ஐ. எனப்படும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கையொப்பம் பெற்று வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.   கிராம   நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய    பிறகு   வாரிசு  சான்றிதழ் வட்டாட்சியரால் உங்களுக்கு வழங்கப்படும். ஒரு வாரம் கழித்து வாரிசுச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு என்னென்ன வேண்டும்?

இறந்தவருக்கு யாரெல்லாம் வாரிசு என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்களின் முகவரிச் சான்று நகல் இணைக்க வேண்டும். அவர்கள் என்ன வகையில் வாரிசு ஆகிறார்கள் என்று குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக உள்ள ஆவண நகல்கள் இணைக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள திருமணமான ஒரு ஆண் இறந்து விட்டால்அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத மகன், மகள்கள் அவருக்கு வாரிசுகள்ஆகிறார்கள். குடும்பத்தில் உள்ள  திருமணமாகாத மகன்இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசுச் சான்றிதழ் ஒருவருக்கு எப்போது தேவைப்படுகிறது?

இறந்தவரின் பெயரில் வங்கிகளில்அல்லது நிதி நிறுவனங்களில் உள்ள சேமிப்பு அல்லதுவைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில்இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப்பலவிதங்களில் பயன்படுகிறது. மேலும், இறந்தவருடைய பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம்வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசு சான்றிதழ் தேவை .

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசாங்க பணிகளில்பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப  ஓய்வூதியம் மற்றும் பணிப்பலன்களைப் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய்ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ்அவசியமாகிறது.

எவ்வளவு நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவர் இறந்தபிற எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்து எத்தனை
நாட்களில் வாரிசு சான்றிதழ் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கப்படவேண்டும். இல்லையெனில் என்ன  காரணத்தினால் தாமதம் ஆகிறது? என்பதை விண்ணப்பதாரருக்கு அரசு அலுவலர் தெரிவிக்க  வேண்டும்.

எப்போது வாரிசு சான்றிதழ் மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து
அவர்களிடையே பிரச்சினைகள் இருந்தாலோ, தத்துஎடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமைகோரினாலோ, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச்சான்றிதழ் கேட்டாலோ  வட்டாட்சியர்
 அலுவலகம் வாரிசுச்சான்றிதழை தர மறுக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச்சான்றிழ் வழங்கவேண்டும்? என உத்தரவு  பெற்று வரச்சொல்லலாம். ஒருவர் பல வருடங்களாக காணாமல்போயிருந்தாலும் வாரிசு சான்றிதழ் பெறலாம்!

ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கு மேல்ஆகிவிட்டிருந்தால் அவர் கண்டிப்பாக திரும்பி வந்துவிடுவார்என்று நம்புவது, அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையேதவிர, அது வட்டாட்சியரை எந்தவிதத்திலும்
 பாதிக்காது. அப்படிக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவு வாயிலாக, ‘அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்துமீதியுள்ளவர்களின் பெயர்களோடு
வாரிசுச் சான்றிதழ் பெறமுடியும்.
இன்றியமையாதது வாரிசு சான்றிதழ் ஒருவர் இறந்த பிறகு அவரின் பணம் மற்றும் சொத்துக்களைஅவருடைய வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கும்,அவர்களிடையே பிரச்சனைகள் ஏதும்  ராமலிருப்பதற்கும்வாரிசுச் சான்றிதழ் அவசியம் ஆகிறது. இந்த வாரிசுச் சான்றிதழ்சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் அனைவருக்கும் தேவைப்படுவதால், இது இன்றியமையாதசான்றிதழாகக் கருதப்படுகிறது.

வட்டாட்சியரின் பங்கு

வட்டாட்சியர் வழங்கும் வாரிசுச் சான்றிதழில்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரேமுழுப் பொறுப்பு ஆவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர்பெயர் விட்டுப்போயிருந்தாலோ அது பின்னாளில் ஒருபிரச்சினையானாலோ அதற்கு வட்டாட்சியரே முழுப் பொறுப்பு ஆவார். எனவே தான் வட்டாட்சியர்கள் இச்சான்றிதழ்  ளிப்பதில்அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

வாரிசு சான்றிதழ் விண்ணப்பப்படிவம் எங்கு கிடைக்கும்?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர்அலுவலகங்களில் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கிறது. இணைய தளத்தில் கீழ்காணும்முகவரிக்குச் சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf

இருந்தாலும், அந்த விண்ணப்பத்தில் உள்ள வாரிசுகள் பட்டியலை மட்டும் டைப்பிங் செய்து இணைப்பது நல்லது.

வாரிசுச் சான்றிதழ்களில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன?

இப்போது உள்ள வாரிசுச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தில் முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இது  குழப்பத்தை விளைவிக்கும். எனவே இறந்தவர்களின் வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம்நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் எனஅனைத்துத் தகவல்களும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

Sunday, 7 January 2018

Basic Unit Conversion - Every Civil Engineer Must Know

    CONCRETE GRADES:
    M5 = 1:4:8
    M10= 1:3:6
    M15= 1:2:4
    M20=  1:1.5:3
    M25= 1:1:2
CLEAR COVER TO MAIN REINFORCEMENT:
1.FOOTINGS : 50 mm
2.RAFT  FOUNDATION.TOP : 50 mm
3.RAFT FOUNDATION.BOTTOM/SIDES : 75 mm
4.STRAP BEAM  : 50 mm
5.GRADE SLAB : 20 mm
6.COLUMN : 40 mm
7.SHEAR WALL : 25  mm
8.BEAMS : 25 mm
9.SLABS : 15 mm
10.FLAT SLAB : 20 mm
11.STAIRCASE  : 15 mm
12.RET. WALL : 20/ 25 mm on earth
13.WATER RETAINING STRUCTURES :  20/30 mm

WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg
12mm = 0.888  Kg
16mm = 1.578 Kg
20mm = 2.466 Kg
25mm = 3.853 Kg
32mm = 6.313  Kg
40mm = 9.865 Kg
1bag cement-50kg
1feet-0.3048m
1m-3.28ft
1sq.m-10.76sq.f t
1cu.m-35.28cu.ft
1acre-43560sq.ft
1hectare-2.47acre

DESIGN MIX:
M10 ( 1 : 3.92 : 5.62)
Cement : 210 Kg/ M 3
20  mm Jelly : 708 Kg/ M 3
12.5 mm Jelly : 472 Kg/ M 3
River sand : 823 Kg/ M  3
Total water : 185 Kg/ M 3
Fresh concrete density: 2398 Kg/M 3
M20 ( 1 : 2.48 :  3.55)
Cement : 320 Kg/ M 3
20 mm Jelly : 683 Kg/ M 3
12.5 mm Jelly :  455 Kg/ M 3
River sand : 794 Kg/ M 3
Total water : 176 Kg/ M  3
Admixture : 0.7%
Fresh concrete density: 2430 Kg/ M 3
M25 ( 1 : 2.28 :  3.27)
Cement : 340 Kg/ M 3
20 mm Jelly : 667 Kg/ M 3
12.5 mm Jelly :  445 Kg/ M 3
River sand : 775 Kg/ M 3
Total water : 185 Kg/ M  3
Admixture : 0.6%
Fresh concrete density: 2414 Kg/ M 3
Note: sand 775  + 2% moisture, Water185 -20.5 =
164 Liters,
Admixture = 0.5% is  100ml
M30 ( 1 : 2 : 2.87)
Cement : 380 Kg/ M 3
20 mm Jelly : 654 Kg/ M  3
12.5 mm Jelly : 436 Kg/ M 3
River sand : 760 Kg/ M 3
Total water :  187 Kg/ M 3
Admixture : 0.7%
Fresh concrete density: 2420 Kg/ M 3
Note:  Sand = 760 Kg with 2% moisture
(170.80+15.20)

STANDARD CONVERSION FACTORS
INCH = 25.4 MILLIMETRE
FOOT =  0.3048 METRE
YARD = 0.9144 METRE
MILE = 1.6093 KILOMETER
ACRE = 0.4047  HECTARE
POUND = 0.4536 KILOGRAM
DEGREE FARENHEIT X 5/9 – 32 =  DEGREE
CELSIUS
MILLIMETRE= 0.0394 INCH
METRE = 3.2808FOOT
METRE =  1.0936YARD

MATERIAL CALCULATION:
CEMENT IN BAGS
01. PCC 1:5:10 1440/5*0.45 129.60Kg 2.59
02. PCC 1:4:8(M 7.5)  1440/4*0.45 162.00Kg 3.24
03. PCC 1:2:4(M 15) 1440/2*0.45 324.00Kg  6.48
04. PCC 1:3:6(M 10) 1440/3*0.45 216.00Kg 4.32
05. RCC 1:2:4(M 15)  144/2*0.45 324.00Kg 6.48
06. RCC 1:1.5:3(M 20) 1440/1.5*0.45  32.00Kg 8.64
07. RCC 1:1:2(M 25) 370.00Kg  7.40
08. RCC M 30 410.00Kg 8.20
09. RCC M35 445.00Kg 8.90
10. RCC M40  480.00Kg 9.60
11. Damp Proof Course CM 1:3,20mm tk 1440/3*0.022 10.56Kg  0.21
12. 2″tk precast slab M15 324*0.05 16.20Kg 0.32
13. 3″tk precast slab  M15 324*0.075 24.30Kg 0.49
14. GC Masonry CM 1:7 1440/7*0.34  70.00Kg1.40
15. Brick Work CM 1:6 1440/6*0.25 60.00Kg 1.20
16. Brick  Work CM 1:4, 115tk 1440/4*0.25*0.115 10.35Kg 0.21
17. Grano Flooring CC  1:1.5:3 1440/1.5*0.45*0.05 21.60Kg 0.43
18. Plastering CM 1:3, 12mm tk  1440/3*0.014 6.72Kg 0.13
19. Wall Plastering CM 1:4, 12mm tk  1440/4*0.014 5.00Kg 0.10
20. Laying Pressed Tiles Over
a CM 1:4, 20mm tk  1440/4*0.022 7.92Kg 0.16
01. Any Concrete Work
(PCC, RCC) 0.45*35.315= 20.00
02. Damp  Proof Course
CM `1:3, 20mm tk 1.00
03. 2″tk Precast slab M15 1.00
04.  3″tk Precast slab M15 1.50
05. SS Masonry in CM 1:7 15.00
06. Brick Work  in CM 1:6 15.00
07. Brick Work in CM 1:4,115mm tk 2.00
08. Grano Flooring  in CC 1:1.5:3 1.00
09. Plastering in CM 1:3, 12mm tk 1.00
10. Wall  Plastering CM 1:4, 12mm tk 1.00
11. Laying Pressed Tiles over a CM 1:4, 20mm  tk
1.00
12. Ceramic Tiles, Marble, Granite, Cuddapah slab
CM 1:4, 20mm  tk 1.00

UNIT WEIGHT:
01. Concrete 25 kN/m3
02. Brick 19 kN/m3
03.  Steel 7850 Kg/m3
04. Water 1000 Lt/m3
05. Cement 1440 Kg/m3
06. 1Gallon  4.81 Litres
07. Link 8″ = 200mm
08. 1 Hectare 2.471 acr(10000m2)
09. 1  Acr 4046.82m2 = 100 cent

DEVELOPMENT LENGTH:
01. Compression 38d
02. Tension 47 &  60d
03. 1 Cent 435.60 Sft
04. 1 Meter 3.2808 ft
05. 1 M2 10.76  ft2
06. 1 Feet 0.3048m
07. 1 KN 100Kg
08. 1kN 1000N
09. 1 Ton 1000Kg  = 10,000 N = 10 kN
10. 1 kG 9.81N

BRICK:
Weight = 3.17 – 3.80 Kg
Water absorption 12 to  15%
Compressive strength = 36Kn/cm2
230mm Wall/m3 = 460 Bricks + 20Cft  Sand +
66Kg Cement
There are many basics civil engg fact which i will be adding more in the future

Friday, 5 January 2018

மன்னிப்பு

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது.



 'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.



'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.



இந்தியா மதங்களின் நாடு.


மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.


இஸ்லாம் கடவுளை  முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.



'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.


ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?


நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர் களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.


அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.


மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.


உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.


மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.


Thursday, 4 January 2018

பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்

1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள்.
2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால்விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்.
3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.
4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்....
5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள்.
6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.
7. ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள், ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்கள் அதை நம்புவதில்லை.


#உளவியல்

Wednesday, 3 January 2018

உயிலும் மரண சாசனமும் - Law of Wills

இஸ்லாம் அனுமதிக்கின்ற வஸிய்யத் என்ற மரண சாசனத்திற்கு உயில் என்று விளக்கம் அளித்தாலும், இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. (LAW OF WILLS) தன்னாணை, அல்லது விருப்புறுதிச் சட்டத்தைத் தான் உயில் என்கிறோம். இங்கிலாந்தில் உயில்களுக்கான சட்டம் கி.பி.1837ல் இயற்றப்பட்டது. இந்து சாஸ்திரங்களில் உயில் என்பதே தெரியாத ஒன்று. அதை ஒரு புதிராகக் கருதினார்கள்.

கூட்டுக் குடும்பத்திட்டம், தத்து எடுக்கும் பழக்கம் ஆகியவற்றால் பழங்கால இந்தியாவில் உயில் மூலம் சொத்துரிமை வழங்கும் பழக்கம் அறவே இல்லாமல் இருந்தது. ஆனால் உயிலுக்கு மாற்றாக, அல்லது நெருக்கமாக அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்து விருப்புறுதிகளின் சட்டம், இந்து வழியுரிமை மற்றும் வாரிசு சட்டத்தின் ஒரு பாகமே. நீதிமன்றங்களும் கூடுமானவரை இந்து விருப்புறுதிகளுக்கு கொடையளிப்பதற்கான சட்டத்தையே பயன்படுத்தி வந்தன. 1870-ம் ஆண்டில் தான் இந்து உயில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

உயில் என்றால் என்ன ? ஒரு மனிதன், தான் இறக்கும் தருவாயில் தன் எண்ணங்களை ஒரு சாசனம் மூலம் தெரிவிப்பதே உயில் எனப்படுகிறது. இதனை இஸ்லாத்தில் வஸிய்யத் என்போம். 1.உயில், அதை எழுதியவரின் எண்ணத்தைச் சட்டப்படி வெளிப்படுத்தியதாகவும், அவரது சொத்துக்களைப் பற்றியதாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து வேறுவகையான எண்ணங்களை வெளிப்படுத்தினால் அது செல்லாது. உதாரணமாக, தான் இறந்த பிறகு தன் மனைவி தத்து எடுக்கலாம் என்று எழுதினால் அது உயில் ஆகாது.2. சொத்து மாற்ற ஏற்பாடு(DISPOSITION)அவசியம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் உயில் செல்லும்.

3. உயில், ஆவணத்தில், அதை எழுதுபவரின் எண்ணத்தை தெளிவான சொற்களால் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தியாவில் உயில் ஆவணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புருஷோத்தம்-ஏ.கே.ஷேதாஸ் வழக்கில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 சாசனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கும், உயிலைப் பதிவு செய்வது கட்டாயமல்ல என்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம் என அந்த வழக்கில் கருத்து தெரிவிக்கப்பட்டது. உயில் என்பது, மிகவும் அமைதியான, அவசியமான நேரங்களில் தயாரிக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகும். எனவே, இறப்பின் பிடியில் இருக்கும் ஒரு மனிதன் உயிருடன் இருப்பவரிடம் தன் விருப்பங்களை நிறைவேற்றுமாறு தெரிவித்தால், உயில் எழுதக்கூடியவர் புத்தி சுவாதீனம் உள்ளவராகவும்,தகுதி படைத்தவராகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 லச்சோபிலி(எ) கோபிநாராயன் என்கிற வழக்கில்

உயில் எழுதியவர் நீரழிவு நோய் காரணமாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தன் ஒரே மகனின் இறப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தார். மனநோயாளி போல காணப்பட்டார். இந்நிலையில் மேல்முறையீட்டாளர்கள் சார்பில் மோதிலால் நேரு என்பவர் வாதிடும் போது, உயிலை உறுதி செய்து கூறுபவர்கள் தாம் அதை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்தை, தன் இறப்பிற்குப் பிறகு யார் அடைய வேண்டும் என்பது குறித்து எழுதும் சாசனமே உயிலாகும்.

 உயில் எழுதுவதற்கு கீழ்க்கண்ட ரத்துக்கள் பின்பற்றப்பட வேண்டும்.

 1. அது எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.

2.உயில் எழுதுபவரால் கையயழுத்திடப்பட்டிருக்க வேண்டும்.

3. குறைந்த பட்சம் இரு சாட்சிகளின் கையயழுத்து இருக்க வேண்டும்.

    ஆனால், முஸ்லிம்களின் மரண சாசனத்திற்கு (வஸிய்யத்) இந்த நிபந்தனைகள் தேவையில்லை. உயிலுக்கும், வஸிய்யத்திற்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சொத்துரிமை பெறும் வாரிசுகளுக்கு வஸிய்யத் மூலம் சொத்து கொடுக்க முடியாது. இதை அறியாமல் அவர் வஸிய்யத் செய்திருந்தால், மற்ற வாரிசுதாரர்கள் இசைவு தெரிவித்தால் மட்டுமே அது செல்லபடியாகும்.

முஸ்லிமல்லாதோர் உயில் எழுதினால், யாருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தன் இறப்புக்குப் பின் சொத்துக்கள் அடையுமாறு எழுதி வைக்கலாம்.

 ஆனால் இஸ்லாமியச் சட்டப்படி உயில் (வஸிய்யத்) எழுதும் போது, உயில் அளிப்பவர் தன் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயில் வழிக்கொடை அளிக்க முடியும். இறந்த பின் ஏற்படும் செலவுகள், முன்புள்ள கடன்கள் ஆகியவை போக மீதி இருப்பதே உயில் எழுதியவரின் சொத்தாகக் கருதப்படும்,

 ஹிபா என்னும் அன்பளிப்பு சாசனத்தில் உடைமையளித்தல் பொருளுக்கு உரியவர் இறந்த பின்பே உடைமையளித்தல் நிகழும்.

 அப்துர் கபூர்-அப்துர்ரஸ்ஸாக்(1959) என்ற வழக்கில்

ஒரு தந்தையும் அவரது மகன்களும் சேர்ந்து ஒரு பாகப்பிரிவினைப் பத்திரம் எழுதினார்கள். தந்தை இறந்த பின்னர் அவருடைய இரு புதல்வர்கள் பத்திரத்தில் குறிப்பிடப்படாத சொத்துக்களின் உரிமை கொண்டாட முடியாது என்றும், அந்தச் சொத்துக்களை பத்திரத்தில் பார்ட்டிகளாக இல்லாத அவருடைய மற்ற மூன்று புதல்வர்களும் அடைவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தையின் மறைவுக்குப் பிறகு மேற்சொன்ன வாரிசுதாரர்களான இரு புதல்வர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்காததால் இந்த ஆவணம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், வாரிசுதாரர்கள் ஒரு முறை தங்கள் ஒப்புதலை அளித்து விட்ட பிறகு அதை வாபஸ் பெற முடியாது. (ஹனபி).

ஒரு முஸ்லிம் மூன்றில் ஒரு பங்குக்கு மேல், வாரிசு அல்லாத ஒருவருக்கு எழுதினாலும் வாரிசுதாரர்கள் ஒப்புதல் தந்தால் அந்த உயில் ஆவணம் செல்லும்.

 ஒரு முஸ்லிம், இஸ்லாமிய பிரார்த்தனை தலங்களுக்கு அல்லாமல் மற்ற சமய பிரார்த்தனைக் கூடங்களுக்கு உயில் மூலம் சொத்துகள் எழுத முடியாது.

பள்ளிவாசல் கட்டுவதற்காக சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைச் செலவிடலாம் என்று ஒருவர் உயில் எழுதலாம்.

வயது வந்தவர்களே உயில் எழுத முடியும். உயில் மூலம் எந்தச் சொத்துக்களைக் கொடுக்க விரும்புகிறாரோ அந்தச் சொத்துக்களுக்கு அவர் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும். உயில் எழுதும் போது அந்தச் சொத்துக்கு அவர் உரிமை பெற்றவராக இல்லாவிட்டாலும், அவர் இறந்த பிறகாவது அந்தச் சொத்தின் உரிமையை அவர் பெற்றாக வேண்டும்.

ரீ அத் சட்டப்படி ஒரு முஸ்லிம் தற்கொலை செய்வது கூடாது. எனவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உயில் எழுதப்பட்டிருந்தால் அது செல்லாது. உதாரணமாக, உயில் எழுதுவதற்கு முன் வித்தை வாங்கி வந்து, பின்னர் உயில் எழுதினார் என நிரூபிக்கப்பட்டால் அந்த உயில் செல்லாது. உயில் எழுதிய பிறகே விம் வாங்கி வந்தார் என நிரூபிக்கப்பட்டால் உயில் செல்லும்.

உயில் சாசனத்தின் வாசகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாய்மொழியாகவோ, எழுத்துமூலமாகவோ அவருடைய எண்ணங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். முத்திரைத்தாளில் தான் எழுத வேண்டும் என்றோ, பத்திரப் பதிவு செய்துதான் ஆக வேண்டும் என்றோ அவசியமில்லை. கடிதங்களும், குறிப்புகளும் கூட சில சந்தர்ப்பங்களில் உயிலாக ஏற்கப்பட்டிருந்தது.

உயில் சாசனத்தை யார் எழுதினாரோ அவரது கொலைக்குக் காரணமாக இருந்தவருக்கு உயில் வழிச் சொத்து கிடையாது. அவரது பெயர் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சரியே. பிறக்காத குழந்தைக்கு உயில் வழிக்கொடை அளிக்க முடியாது. கருவில் உள்ள குழந்தைக்கு எழுதி வைக்கலாம். ஆனால், எழுதி வைத்த அந்தச் சொத்து அந்த குழந்தைக்கு கிடைக்கும்.

உயில் எழுதியவர் இறந்த பிறகு உடனடியாக உடைமை மாற்றம் ஏற்படாது போனால் செல்லுபடியாகாது. எனவே, தன்னுடைய புதல்வரின் வாழ்நாளைக்கு பின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை வேறு ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருந்தால், அது செல்லாது. இரண்டில் ஒன்று என்ற முறையில் விருப்புறுதி வாயிலாக அளித்தால் அது செல்லும். எடுத்துக்காட்டாக முபாரக்கிற்கோ, அல்லது அபூயூசுப்பிற்கோ என்று உயில் எழுதப்பட்டிருந்தால், உயில் எழுதியவர் இறந்த சமயத்தில் (முதலில் குறிப்பிட்ட) முபாரக் உயிரோடு இருந்தால் அவருக்கே சொத்து கிடைக்கும். உயில் எழுதியவருக்கு முன்னரே முபாரக் என்பவர் இறந்து விட்டால் உயில் வழிச் சொத்தை அபூயூசுப் அடைவார்.

´ஷியா முஸ்லிம்கள் சட்டப்படி மற்ற வாரிசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, தான் விரும்பிய எவருக்கும் ஒருவர் உயில் எழுதலாம். அது வாரிசுதாரராகவே இருந்தாலும் கூட செல்லும். ஆனால் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதே போல் கருவில் இருக்கும் குழந்தைக்கு உயில் எழுதி வைத்தால் 10 சந்திர மாதங்களுக்குள் குழந்தை பிறந்தாலும் உயில் செல்லும் என்பது´யாக்களின் சட்டமாகும்.

மர்ளுல் மவ்த் எனப்படும் மரணப்படுக்கையில் உள்ள ஒருவர் அன்பளிப்பு கொடுக்க இஸ்லாமியச் சட்டத்தில் அனுமதி உண்டு. ஆனால் அது வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். வாதநோயா, நாட்பட நீடிக்கும் எந்த நோயுமோ மரண நோயாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக, மரணப்பிணியின் காலக்கெடு ஓராண்டுக்காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. (ஹிதாயா). இறந்து விடுவோம் என்ற நிலையில், பிரதிபலன் எதிர்ப்பார்க்காமல் அளிக்கும் அன்பளிப்பிற்கே மரணப் பிணியின் தாக்கத்தால் அளிக்கும் அன்பளிப்புக்குள்ள கட்டுப்பாடுகளும், விதிகளும் பொருந்தும்.

உயில் எழுதும் முறை

பொதுவாக உயில் பத்திரம் பின்வருமாறு அமையலாம்…

……… ஊரில் வசிக்கும் முஸ்லிமான …. என்பவரின் மகன், மகள் ……….. என்பவரான நான் உடல் நலத்துடனும், சுய நினைவுடனும் என்னுடைய இறுதி விருப்புறுதியாக (உயிலாக) அல்லது மரணசாசனமாக இதை எழுதுகிறேன்.

இப்படி ஆரம்பித்து, அவர் விரும்பக் கூடிய விதத்தில் உயில் வாசகத்தை எழுதலாம். உதாரணமாக ….

நான் இதன் மூலம் இதற்கு முன்னால் எழுதியிருக்கும் எல்லா சாசனங்களையும் ரத்துச் செய்கிறேன். எனக்கு ஆண் வாரிசுகள் இல்லை. ஆனால் என்னுடைய மகள் ………….. என்பவருக்கு ஆண் குழந்தை உண்டு. அவரது பெயர் ………………. இவர் என்னுடைய காரியங்களை மிகவும் பொறுப்புடன் என் அன்புக் கட்டளையை ஏற்று செயல்பட்டு வருகிறார். என்னைக் கவனிப்பதற்காகவே வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்தும் செல்லாமல், என் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமியச் சட்டப்படி நான் இறந்து விட்டால் என் மகளும மற்றவர்களும் உயிரோடு இருக்கும் போது என் பேரன் என் சொத்துக்கு வாரிசாக முடியாது. எனவே, என் பேரன் ……….. பேரில் எனக்குள்ள பாசத்தின் காரணமாகவும், மனநிறைவுக்காகவும் என்னை அவன் பொறுப்புடன் கவனித்து வருவதாலும் என் சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை கீழ்கண்ட இரு சாட்சிகள் முன்னிலையில் இந்த உயில் மூலம் என் பேரன் ………….க்கு நான் அன்பளிப்பாக அனுபவிக்கும்படி எழுதி வைக்கிறேன். இந்த உயில் ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் என் மொத்த சொத்துக்களில் மூன்றில் ஒரு பாகச் சொத்துக்கள் என் வாழ்நாளுக்குப் பின்னால் மேற்சொன்னபடி அமலுக்கு வரவேண்டியதாகும். என் ஆயுளுக்குள் இதை மாற்றவும், ரத்துச் செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு.

சாட்சிகள் ஒப்பம் …

1. ………………..

2. ………………

இருப்பினும், இஸ்லாமியச் சட்டப்படி விருப்புறுதி ஆவணத்தில், ஒருவர் தன்னுடைய விருப்பத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருந்தால் அந்த ஆவணத்தில் அவர் கையயழுத்து இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதேபோல அவர் கையயழுத்து போட்டிருந்தாலும் சாட்சிகள் கையயழுத்திட்டு உறுதி செய்ய வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. கடிதம் கூட உயிலாக ஏற்கப்படலாம். ஒரு முஸ்லிம் தன் ஏஜண்டுக்கு கடிதம் எழுதி, தன் வாழ்நாளுக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்களை எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அந்தக் கடிதமே உயிலாக ஏற்கப்படும்.

கோடிஸில்(CODICIL)என்பது மரண சாசன ஒப்பந்தத்தைக் குறிக்கும். ஒரு வழக்குரைஞர் தன் கட்சிக்காரரின் வேண்டுகோளுக்கிணங்க உயில் எழுதி அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். அஞ்சலில் வந்த உயிலைப் படித்துப்பார்த்த அந்த நபர் சில திருத்தங்களைக் குறிப்பிட்டு தந்தி மூலம் தெரிவித்தார். அதையடுத்து ஒரு விவரமான கடிதமுமம் எழுதி அனுப்பினார். தந்திச் செய்தியும், விளக்க மடலும் உயிலின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.

இந்துச் சட்டத்தில் இருப்பதைப் போல, முழு சொத்துக்களையும் உயில் மூலம் ஒரு முஸ்லிம் கொடுக்க முடியாது. மூன்றில் ஒரு பங்கு தான் எழுதி வைக்க முடியும். அதுவும் வாரிசு அல்லாதவர்களுக்குத்தான் எழுத முடியும். அப்படியே வாரிசுகளில் ஒருவருக்கு உயில் எழுதினால் மற்ற வாரிசுகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே அது செல்லும் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்பான சட்டமாகும்.

முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் 

முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriage Act 1939)
*******************************************

1939ம் ஆண்டு முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriage Act 1939) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களைக் காட்டி முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறலாம்.

1. நான்கு ஆண்டுகளுக்கோ அதற்கு மேற்பட்டோ கணவன் போன இடம் தெரியவில்லையயன்றாலும்

2. இரண்டு ஆண்டுகள் மனைவிக்கு குடும்பப் பராமரிப்பு செலவு கொடுக்க கணவன் தவறினாலும்

3. ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலோ மேல் முறையீடு செல்லும் உரிமையிழந்து கணவனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டாலும்

4. தகுந்த காரணம் இல்லாமல் மூன்று ஆண்டுகள் வரை கணவன் தன் கடமைகளை செய்யத் தவறினாலும்

5. கணவன் ஆண்மையற்ற தன்மை உடையவன் என்று நிரூபிக்கப்பட்டாலும்

6. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொழுநோய், பெண்சீக்கு நோய் ஆகியவை கணவனுக்கு இருந்தாலும்

7. பெண்ணுக்கு பருவ வயது எய்துவதற்கு முன்பெற்றோராலோ, காப்பாளராலோ திருமணம் செய்து வைக்கப்பட்டாலும் இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தவறுகளை கணவன் செய்தாலும் ஒரு பெண் விவாகரத்துப் பெறலாம்.

முஸ்லிம் சட்டப்படி கணவன் மதம் மாறினால் விவாகரத்து ஏற்பட்டுவிடுவது போல மனைவி இஸ்லாத்தை துறந்தாலும் திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது.

 சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் U.M.அபுல் கலாம் முஸ்லிம் சட்டம் என்ற நூலின் 203ம் பக்கத்தில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வழக்கின் தீர்ப்பைப் பற்றி குறிப்பிடுகிறார்.

பிற மதத் தம்பதிகளில் ஒருவர் முஸ்லிமாக மாறிவந்த மற்றவரை முஸ்லிமாக மாறும்படி அழைக்கவும் அதை அவர் மறுக்கவும் செய்த காரணத்தை மட்டிலும் வைத்து வேறு மத சட்டஅடிப்படையில் நடந்த திருமணத்தை முஸ்லிம் சட்ட விதிப்படி திருமண முறிவு செய்து கொள்ள உரிமைக் கோருவது இந்திய நாட்டுச் சட்டத்திற்கு ஒத்துவராது என்று கூறி நூர்ஜஹான் பேகம் வழக்கில் (Noorjahan Vs Enggene Tishence 1941 45 CWN 104) கூறப்பட்டுள்ள முடிவைப் பின்பற்றி ரொபஸ்ஸாகான் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சரளா முத்கல் வழக்கில் (Sarala Mudgal Vs Union of India and others 1995 (3) SCC 635 – 1995 AIR SC 1531) இந்து கணவன் முஸ்லிம் மதத்திற்கு மாறிவந்தால் இந்து முறைப்படி நடந்த திருமணம் முறிந்து விடாது என்றும் இந்து திருமணச் சட்டத்தின்படி நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை அச்சட்ட முறைப்படியே முறிக்க வேண்டும் என்றும், மதம் மாறி வந்து முஸ்லிம் முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் முந்தி திருமணம் ரத்தாகி விட்டது என்றும் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்கு பிரிவு 494 இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மூன்று மாத காலமோ அல்லது மூன்று மாதவிடாய் காலமோ முடியும் வரை கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம். இந்த காலம் முடிந்தவுடன் அவள் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்று விடுகிறாள். அதனால் தான் விவாகரத்திற்கு ஆளான முந்திய கணவனிடமிருந்து அவள் ஜீவனாம்சம் பெறுவதை இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்க வில்லை. என்றாலும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு தகப்பனின் கடமை. வயது அடைவது வரையில் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும்.

1973ம் ஆண்டு குற்ற விசாரணை முறை சட்டம் மத்திய சட்டம் 2/1974ன் படி இச்சட்டத்தின் கீழ் 125 முதல் 128 வரை உள்ள பிரிவுகள் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு ஜீவனாம்சத்திற்கு வழிவகை செய்கின்றன. உடனடியாகவும், விரைவாகவும் நிவாரணம் கிடைக்க வழி செய்கிறது. இவ்விதித் துறைகள் சட்ட சிக்கல்களில் மூழ்காமல் குறுக்கு விசாரணை முறையில் (Summary Trails) முடிவுகட்ட வழி செய்கிறது. சிவில் வழக்கிலுள்ள நுட்பமும், திட்டமும், எதிர்ப்பும், மறுப்பும், விசாரணைகளும் குறுக்கு விசாரணைகளும் இங்கு உன்னிப்பாக பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. சிவில் வழக்கு மூலம் முடிவு கட்டப்பட்ட பின்னர் அத்தீர்ப்பைக் காண்பித்து இப்பிரிவின் கீழ் நிவாரணம் கேட்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வழக்கில் (Air 1968 Madras 79) தீர்ப்பளித்துள்ளது.

உயில் பற்றிய கேள்வி பதில்கள்

1.உயில் என்றால் என்ன? 

ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2.எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்? 

ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3.உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா? 

கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4.உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா? 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5.கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா? 

எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6.உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா? 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7.உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன? 

கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8.உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா? 

கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9.உயிலை ரத்து செய்ய முடியுமா? 

ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10.உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன?யாரிடம் சொத்து இருக்கும்? 

உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11,உயில் எழுதிய பிறகு, அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா?

கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.உயில் எழுதி விட்டு, அதை அவரே விற்று விட்டால், உயில் மூலம் பயனடைபவருக்கு எவ்வித சொத்தும் கிடைக்காது. உரிமையும் இல்லை. 

12.கொடை சாசனத்திற்கும், உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம் ?

கொடை சாசனம் எழுதியவுடன், அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.உயில் என்பது, அதை எழுதியவர் மறைவுக்கு பிறகு, நடைமுறைக்கு வரும்.

13.கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?

100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்?

சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15.உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

16.எல்லா மதத்தினரும் உயில் எழுத முடியுமா?

     முடியும்.

17,உயிலை முத்திரைதாளில்தான் எழுத 
    வேண்டுமா?

சாதாரண தாளிலும் எழுதலாம். ஆனால், ஒருவர் சாவுக்கு பின்பே, இது நடைமுறைக்கு வருவதாலும், நீதிமன்றத்தில் பின்னாளில் குறியீடு செய்ய தேவைப்படும் என்பதாலும், முத்திரைத்தாளில் எழுதினால் நல்லது. பதிந்தால்,அதை விட நல்லது.

18.சாட்சி யாரை போடலாம் ?

நம்பிக்கையான, இள வயதுள்ளவர்கள் இருப்பது நல்லது. பின்னாளில் நீதிமன்றம், வழக்கு என்று வந்தால், வயதானவர்களை சாட்சி போட்டால், இறந்துவிட்டால், பிரச்சினை வரலாம். 

19.உயிலை probate செய்ய வேண்டுமா ?

தமிழ்நாட்டில் சென்னை தவிர, அனைத்து இடங்களிலும், probate செய்ய தேவை இல்லை.

20.உயிலை நோட்டரி பப்ளிக் முன் எழுதி வைத்து கொண்டால் செல்லுமா?

எழுதலாம். ஆனால், பின்பு, அவரையும், பிரச்சினை என்று வந்தால், சாட்சியாக விசாரிக்க வேண்டும், நீதிமன்றத்தில்.

21.உயிலை பத்திர அலுவகத்தில் பதிய என்ன நடைமுறை ?

எந்த பத்திர அலுவகத்திலும் பதியலாம்.ஸ்டாம்ப் தேவை இல்லை. சொத்து மதிப்பில் 1 % கட்டணம்.அதிகபட்சம் 5௦௦ ரூ. 

 22. உயிலை பத்திர அலுவகத்தில் வைத்திருக்க முடியுமா ?

மாவட்ட பதிவாளர் அலுவகத்தில், ஒரு உரையிட்ட கவரில் டெபாசிட் செய்து வைக்கலாம். அப்போது பதிய தேவை இல்லை. உயில் எழுதியவர் இறந்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அதை திறந்து பார்க்க விண்ணப்பித்து, அதை பதியலாம்.

Courtesy: இணையப்பதிவுகள்

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...