Sunday, 23 April 2017

Do you know, why CV'S are getting rejected or being Ignored??

Dear Brothers,

Please note for the Job Seekers.
Rejection of CV is due to following reasons,

1. No Subject
2. Wrong Subject
3. Inappropriate Wordings
4. Mismatch Qualification and Experience
5. Unsupported CV Format
6. CV Details in Image Format
7. Missing Contact Information
8. Inappropriate Names ( Prince, Princess, Cute, Dashing etc.,)
9. No introduction email with the attached CV.
Mostly recruiters spent max 1-2 minutes to reading out the CV. So it is the responsibility of the applicant to impress him/her within this tenure. So one must be careful while writing and sending the CV because it shows the reflection of your personality.

Good Luck....👍

Saturday, 22 April 2017

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.

இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. பல நூற்றாண்டுகளாக மூர் (மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது.

பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழக‌ங்களில் போதித்தனர்.

இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர்.

உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது.

ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.

An insightful documentary into the prosperity Islam engendered in Europe during its glorious reign there.

இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.

மூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்


உலகம் வியக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகள்...

பெயர்:- முஹம்மது இப்னு ஜக்கரிய்யா அல் ராஸி (ஆங்கிலத்தில் ரேஜஸ் - Rhazes or Rasis  என்றழைக்கப்படுகிறார்.)

வாழ்ந்த காலம்: (கி.பி.864-930)

சிறப்புகள்:-சின்னம்மை,பெரியம்மை நோய்களுக்கான வேறுபாடுகளை விளக்கிய,அறுவைச் சிகிச்சைக்கு மயக்க மருந்தை பயன்படுத்திய உலகின் தலைசிறந்த முதல் மருத்துவர்.

நன்றி:Islam Ashiq

குறிப்பு:முஸ்லிம் விஞ்ஞானிகள்,அவர்தம் அரிய கண்டுபிடிப்புகள்,இஸ்லாமிய விஞ்ஞான பொற்காலம் ஆகியவற்றின் தகவல்களை கீழே தொகுத்துள்ளேன்.

ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி வரையிலான காலக்கட்டத்தையே 'மத்தியக் காலம்' என்று அழைக்கிறார்கள். இதை சில வரலாற்றாசிரியர்கள் 'இருண்ட காலம்' என குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஐரோப்பியர்களுக்குத்தான் இருண்ட காலமாக இருந்தது. அதே காலத்தில் இஸ்லாமிய சமூகம் விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தது. ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில்தான் முஸ்லிம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.
13 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இக்குறும்படம் '1001 Inventions' என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவரை பல சர்வதேச விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது.


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பற்றிய சிறிய தகவல்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி News 7 நிகழ்ச்சியில் அழகாகப் பேசிய சிறுமி சம்யுக்தா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  

தங்களை முன்னிலைப்படுத்தவும், முகவரி தேடவும், கையூட்டு பெறவும் காயிதே மில்லத் சரித்திரத்தை திரிபுவாதம் செய்து தவறான தகவல்களுடன் ஆவணப்படம் வெளியிடுபவர், எழுதுவர்கள் மத்தியில் உண்மையை உரக்கச் சொல்லும் சிறுமிக்கும் குமரி அனந்தனுக்கும் இதயப்பூர்வ நன்றிகள்.  
வாழ்த்துக்கள்.




Employment & Educational Bi-Weekly Edition

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...