உயிரி தொழில்நுட்பவியல் துறை படிப்புகள்...சர்வதேச வேலை வாய்ப்புகள்!
உயிரின வகைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த பல கேள்விகளுக்கு, பல்துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களால் கூட சொல்ல முடியாத பல விடைகளைத் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து சொல்லியிருக்கின்றனர்.
தாவரவியல் துறை மேம்படுத்தப்பட்ட பின்னர் தொடர்புடைய துறைகளாக உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி), நுண்ணுயிரியியல் (மைக்ரோ பயாலஜி) துறைகள் படிப்புகள் இன்று மாணவர் மத்தியில் விருப்பப் பாடங்களாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.
என்றாலும், மாணவர்கள் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் சிறந்த ஆய்வுக்கூடங்கள் உள்ளனவா, பாடத்திட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளனவா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
கடந்த 20 ஆண்டுகளாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலவற்றில் பாடத்திட்டங்களாக கொண்டு வரப்பட்டுள்ளன. இத்துறைகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அளிக்கும் மானியங்கள் மூலம் பல செயல்முறைத் திட்டங்களை செயல்படுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதுகலை மட்டுமின்றி, ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் முனைவர் படிப்பு முடித்தவர்களுக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இதுகுறித்து திருச்சி தேசியக்கல்லூரியின் உயிர்தொழில் நுட்பத்துறைத் தலைவர், பேராசிரியர் எம்.என். அபுபக்கர் கூறியது:
"தாவரவியல் துறையில், இளங்கலைப் பாட வகுப்புகள் மற்றும் முதுநிலைப் பாட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை எவ்வாறு திசு வளர்ப்பு முறையின் மூலம் பாதுகாக்க முடியும் என பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தவிர, தாவரங்களின் மருத்துவப் பயன்கள் குறித்து எத்தனையோ குறிப்புகள் இருந்தாலும், மருத்துவப் பயன் அறியப்படாத தாவரங்களை இனம் கண்டுகொள்வது, அவற்றின் மருத்துவப் பொருள்களைக் கண்டறிவது, இந்த மருந்துப் பொருள்களை மருத்துவரீதியில் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.
மேலும் இத்துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பொதுவாக தாவரவியல், உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியியல் துறைகளில் பயிலும் மாணவர்கள் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) மற்றும் முனைவர் பட்டம் (பி.எச்டி) என தொடர்ந்து முதுநிலைப் பட்டங்களைப் பெறுவதன் மூலம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, யுனெஸ்கோ, வேர்ல்டு ஹெரிடேஜ் பண்ட்( டபிள்யூ.எச்.எப்), குளோபல் என்விரோமென்டல் பெசிலிட்டி (ஜி.இ.எப்), எப்.ஏ.ஓ., டபிள்யூ.டபிள்யூ.ஓ., ஐ.யூ.சி,என்., உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளன. அவை பரந்து விரிந்த உலகின் பல்வேறு பகுதிகளிலும் அழிவின் விளிம்பிலுள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை மீட்டு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதற்காக இத்துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஏராளமான இளையோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவும் தயாராக உள்ளன.
எனவே, மாணவர்கள் இத்தகைய நிறுவனங்களை அணுகி அவர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். மேலும் மருந்து நிறுவனங்கள், மருந்துகள் கண்டுபிடிப்பு, அதன் பயன்கள் பற்றிய ஆராய்ச்சிகள், உணவு மற்றும் பால்வளத் துறைகளில் நுண்ணுயிரியியல் மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
தாவரவியல், உயிரிதொழில் நுட்பவியல், நுண்ணுயிரியியல் துறைகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பல உயரிய நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
Thanks : Dinamani -25/04/2017