Saturday, 2 December 2017

Basic interview questions for civil engineer 

Following are few general points to remember for civil site engineers to make the construction work easier while maintaining quality of construction.


  • Lapping is not allowed for the bars having diameters more than 36 mm.
  • Chair spacing maximum spacing is 1.00 m (or) 1 No per 1m2.
  • For dowels rod minimum of 12 mm diameter should be used.
  • Chairs minimum of 12 mm diameter bars to be used.
  • Longitudinal reinforcement not less than 0.8% and more than 6% of gross C/S.
  • Minimum bars for square column is 4 No’s and 6 No’s for circular column.
  • Main bars in the slabs shall not be less than 8 mm (HYSD) or 10 mm (Plain bars) and the distributors not less than 8 mm and not more than 1/8 of slab thickness.
  • Minimum thickness of slab is 125 mm.
  • Dimension tolerance for cubes + 2 mm.
  • Free fall of concrete is allowed maximum to 1.50m.
  • Lap slices not be used for bar larger than 36 mm.
  • Water absorption of bricks should not be more than 15 %.
  • PH value of the water should not be less than 6.
  • Compressive strength of Bricks is 3.5 N / mm2.
  • In steel reinforcement binding wire required is 8 kg per MT.
  • In soil filling as per IS code, 3 samples should be taken for core cutting test for every 100m2.


Density of Materials:

Material -                               Density
Bricks                              1600 – 1920 kg/m3
Concrete block              1920 kg/ m3
Reinforced concrete     2310 – 2700 kg/ m3


  • Curing time of RCC Members for different types of cement:


Super Sulphate cement: 7 days
Ordinary Portland cement OPC: 10 days
Minerals & Admixture added cement: 14 days
De-Shuttering time of different RCC Members
De-shuttering timeFor columns, walls, vertical form works = 16-24 hrs.
Soffit formwork to slabs = 3 days (props to be refixed after removal)
Soffit to beams props = 7 days (props to refixed after removal)
Beams spanning upto 4.5m = 7 days
Beams spanning over 4.5m = 14 days
Arches spanning up to 6m = 14 days
Arches spanning over 6m = 21 days

Cube samples required for different quantity of concrete

Quantity of Concrete       No. of cubes rew
1 – 5 m3                                 1 No’s

6 - 15 m3                                2 No’s

16 – 30 m                             33 No’s

31 – 50 m                             34 No’s

Above 50 m3                    4 + 1 No’s of
                               addition of each 50 m3

#interview #civil_engineering

Friday, 3 November 2017

ஒரு சமூகம் உருவாகி கொண்டிருக்கிறது

.அஸ்ஸலாமு அலைக்கும்,

காலையில் ஏழு மணிக்கு
மதரஸா சென்ற சமுதாயம் – இன்று
பள்ளி வாகனத்திற்காக காத்து நிற்கிறது.
ஆம் ,குர் ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

மாலையில் வீட்டில் ஓதிய
எமது சமூகம் – இன்று
ட்யூசன் சென்று கொண்டிருக்கிறது.
ஆம் குர்ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது

பள்ளிக்கூடம் விட்டதும்
நம் சமூகம் –இன்று
தெரு முனைகளில் பலர் சூழ அரட்டையில்...
*ஆம் .இஸ்லாம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.

பருவம் வரா சிறுவனிடம்
இன்று பல பாலியல் படங்கள் – அத்தா ஆசையாய்
வாங்கிக் கொடுத்த ஆன்ட்ராய்டு. போனில்..
*ஆம் .இறை. தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.

அத்தா அயல்நாட்டில்..
அம்மா டிவி நாடகத்தில்..
பிள்ளை தெரு முனைகளில்..
*ஆம் மார்க்கம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.

கைப்பந்து,கால்பந்து
என மும்முரமாய் எம் சமூகம்
தவறில்லை - பள்ளிக்கு அழைத்தால் மட்டும்
நேரமில்லை என்ற பதில்....
*ஆம் .தொழத்  தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.

மகனைத் திருத்த முடியா தந்தை...
மனைவியை கண்டிக்க இயலா கணவன்-
கண்ட்ரோல் இல்லா குடும்பம்.
*ஆம் .ஒழுக்கம் இல்லாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.

தன் கெத்தை காட்ட
வேகமாக ஓடும் மோட்டார் பைக்..
மங்கையர் பார்க்க தலையில்
கரையான் தின்றது போன்ற முடி..
*ஆம்.கஷ்டம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது*.

சப்தமில்லாமல்
ஒரு சமூகம் வீணாய் போய்க் கொண்டிருக்கிறது...
பெற்றோர்களாகிய நம்மால்
உருவாகிக் கொண்டிருக்கிறது...
*ஆம்.நம்மால் ஒரு சமுகம் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது*.

*காலம் கடக்கும் முன்...விழித்துக் கொள்வோம்*..
நம் சமூகத்தை காத்துக் கொள்வோம்..

எம் சமூகம் சரியாய் வளர
பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம்...
*பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்*.
*ஆம். பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்*.

பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு வரச் சொல்லுங்கள்.
*எம் சமூகம் இந்த உலகை ஆளும்..இன்ஷா அல்லாஹ்*..

அறிவோம் நில அளவீடுகளை

நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத்தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களை யும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோ ம். ஆனால் இதில் எத்த‍னை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும். கேட் டா, அட என்ன‍ சார், நீங்க இதெல்லா ம் அவசியமா, நிலத்தை வாங்கினோ மா, சில வருஷ கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை பார்த்தோமா இருக்க‍ணும். சார். அப்ப‍டின்னா சொல்லுவாங்க•
ஆனால் நிலத்தோடு அளவீடு எவ்வ‍ளவு அவசியம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. அவர்களுக்காகவே நில அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள‍ இந்த பதிவை விதை2 விருட்சம் வெளியிடுகிறது
நில அளவீடுகள்

1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்

1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி

1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்

1 சென்ட் – 435.6 சதுர அடி

1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்

1 குழி – 144 சதுர அடி

1 சென்ட் – 3 குழி

3 மா – 1 ஏக்க‍ர்

3 குழி – 435.6 சதுர அடி

1 மா – 100 குழி

1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு

1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

Thursday, 27 April 2017

Know about Bio-Technology..உயிரி தொழில்நுட்பவியல் துறை படிப்புகள்...சர்வதேச வேலை வாய்ப்புகள்!

உயிரி தொழில்நுட்பவியல் துறை படிப்புகள்...சர்வதேச வேலை வாய்ப்புகள்!

உயிரின வகைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த பல கேள்விகளுக்கு, பல்துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்களால் கூட சொல்ல முடியாத பல விடைகளைத் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து சொல்லியிருக்கின்றனர்.

தாவரவியல் துறை மேம்படுத்தப்பட்ட பின்னர் தொடர்புடைய துறைகளாக உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி), நுண்ணுயிரியியல் (மைக்ரோ பயாலஜி) துறைகள் படிப்புகள் இன்று மாணவர் மத்தியில் விருப்பப் பாடங்களாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.

என்றாலும், மாணவர்கள் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் சிறந்த ஆய்வுக்கூடங்கள் உள்ளனவா, பாடத்திட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளனவா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

கடந்த 20 ஆண்டுகளாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலவற்றில் பாடத்திட்டங்களாக கொண்டு வரப்பட்டுள்ளன. இத்துறைகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அளிக்கும் மானியங்கள் மூலம் பல செயல்முறைத் திட்டங்களை செயல்படுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதுகலை மட்டுமின்றி, ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் முனைவர் படிப்பு முடித்தவர்களுக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இதுகுறித்து திருச்சி தேசியக்கல்லூரியின் உயிர்தொழில் நுட்பத்துறைத் தலைவர், பேராசிரியர்  எம்.என். அபுபக்கர் கூறியது:

"தாவரவியல் துறையில், இளங்கலைப் பாட வகுப்புகள் மற்றும் முதுநிலைப் பாட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை எவ்வாறு திசு வளர்ப்பு முறையின் மூலம் பாதுகாக்க முடியும் என பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தவிர, தாவரங்களின் மருத்துவப் பயன்கள் குறித்து எத்தனையோ குறிப்புகள் இருந்தாலும், மருத்துவப் பயன் அறியப்படாத தாவரங்களை இனம் கண்டுகொள்வது, அவற்றின் மருத்துவப் பொருள்களைக் கண்டறிவது, இந்த மருந்துப் பொருள்களை மருத்துவரீதியில் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.

மேலும் இத்துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பொதுவாக தாவரவியல், உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியியல் துறைகளில் பயிலும் மாணவர்கள் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) மற்றும் முனைவர் பட்டம் (பி.எச்டி) என தொடர்ந்து முதுநிலைப் பட்டங்களைப் பெறுவதன் மூலம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக, யுனெஸ்கோ, வேர்ல்டு ஹெரிடேஜ் பண்ட்( டபிள்யூ.எச்.எப்), குளோபல் என்விரோமென்டல் பெசிலிட்டி (ஜி.இ.எப்), எப்.ஏ.ஓ., டபிள்யூ.டபிள்யூ.ஓ., ஐ.யூ.சி,என்., உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளன. அவை பரந்து விரிந்த உலகின் பல்வேறு பகுதிகளிலும் அழிவின் விளிம்பிலுள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை மீட்டு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதற்காக இத்துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஏராளமான இளையோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவும் தயாராக உள்ளன.

எனவே, மாணவர்கள் இத்தகைய நிறுவனங்களை அணுகி அவர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். மேலும் மருந்து நிறுவனங்கள், மருந்துகள் கண்டுபிடிப்பு, அதன் பயன்கள் பற்றிய ஆராய்ச்சிகள், உணவு மற்றும் பால்வளத் துறைகளில் நுண்ணுயிரியியல் மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

தாவரவியல், உயிரிதொழில் நுட்பவியல், நுண்ணுயிரியியல் துறைகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பல உயரிய நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

Thanks : Dinamani -25/04/2017

Wednesday, 26 April 2017

Pre-matric Minority Scholarship/ சிறுபான்மையினர் உதவிதொகை

சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை 2016-2017
(Pre-matric Scholarship)

விண்ணப்ப படிவம் கீழே உள்ளது /  please download the form to fill for further submission
http://www.bcmbcmw.tn.gov.in/documents/declaration2016_17/prematric_advt_2016_17.pdf

Gulf Times Classifed_25.04.2017

Click in the below link to get the classifieds pdf file

https://drive.google.com/file/d/0B-6-P_T3e9IkUXVXdE1XT3FNMFE/view?usp=drivesdk

Sunday, 23 April 2017

Do you know, why CV'S are getting rejected or being Ignored??

Dear Brothers,

Please note for the Job Seekers.
Rejection of CV is due to following reasons,

1. No Subject
2. Wrong Subject
3. Inappropriate Wordings
4. Mismatch Qualification and Experience
5. Unsupported CV Format
6. CV Details in Image Format
7. Missing Contact Information
8. Inappropriate Names ( Prince, Princess, Cute, Dashing etc.,)
9. No introduction email with the attached CV.
Mostly recruiters spent max 1-2 minutes to reading out the CV. So it is the responsibility of the applicant to impress him/her within this tenure. So one must be careful while writing and sending the CV because it shows the reflection of your personality.

Good Luck....👍

Saturday, 22 April 2017

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.

இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. பல நூற்றாண்டுகளாக மூர் (மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது.

பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழக‌ங்களில் போதித்தனர்.

இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர்.

உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது.

ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.

An insightful documentary into the prosperity Islam engendered in Europe during its glorious reign there.

இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.

மூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்


உலகம் வியக்கும் முஸ்லிம் விஞ்ஞானிகள்...

பெயர்:- முஹம்மது இப்னு ஜக்கரிய்யா அல் ராஸி (ஆங்கிலத்தில் ரேஜஸ் - Rhazes or Rasis  என்றழைக்கப்படுகிறார்.)

வாழ்ந்த காலம்: (கி.பி.864-930)

சிறப்புகள்:-சின்னம்மை,பெரியம்மை நோய்களுக்கான வேறுபாடுகளை விளக்கிய,அறுவைச் சிகிச்சைக்கு மயக்க மருந்தை பயன்படுத்திய உலகின் தலைசிறந்த முதல் மருத்துவர்.

நன்றி:Islam Ashiq

குறிப்பு:முஸ்லிம் விஞ்ஞானிகள்,அவர்தம் அரிய கண்டுபிடிப்புகள்,இஸ்லாமிய விஞ்ஞான பொற்காலம் ஆகியவற்றின் தகவல்களை கீழே தொகுத்துள்ளேன்.

ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி வரையிலான காலக்கட்டத்தையே 'மத்தியக் காலம்' என்று அழைக்கிறார்கள். இதை சில வரலாற்றாசிரியர்கள் 'இருண்ட காலம்' என குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஐரோப்பியர்களுக்குத்தான் இருண்ட காலமாக இருந்தது. அதே காலத்தில் இஸ்லாமிய சமூகம் விஞ்ஞானத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தது. ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில்தான் முஸ்லிம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.
13 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இக்குறும்படம் '1001 Inventions' என்ற அமைப்பின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவரை பல சர்வதேச விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது.


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பற்றிய சிறிய தகவல்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி News 7 நிகழ்ச்சியில் அழகாகப் பேசிய சிறுமி சம்யுக்தா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  

தங்களை முன்னிலைப்படுத்தவும், முகவரி தேடவும், கையூட்டு பெறவும் காயிதே மில்லத் சரித்திரத்தை திரிபுவாதம் செய்து தவறான தகவல்களுடன் ஆவணப்படம் வெளியிடுபவர், எழுதுவர்கள் மத்தியில் உண்மையை உரக்கச் சொல்லும் சிறுமிக்கும் குமரி அனந்தனுக்கும் இதயப்பூர்வ நன்றிகள்.  
வாழ்த்துக்கள்.




Employment & Educational Bi-Weekly Edition

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...